இச்சம்பவம் குறித்து கேரள திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் நடிகை வின்ஸி அலோசியஸ் புகாரளித்திருந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நேற்று நள்ளிரவு ஒரு தனியார் தங்கும் விடுதியில் படப்பிடிப்பு சம்பந்தமாக பிரபல சினிமா நடிகர் ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பிரபலங்கள் தங்கி இருந்தனர்.
அப்போது அந்த தனியார் தங்கும் விடுதியில் போதை ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். போலீஸார் சோதனை நடத்த வருவதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட நடிகர் ஷைன் டாம் சாக்கோ அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறி தப்பித்துச் சென்றுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கேரள திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7









