இதனைத்தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ் அணி 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 9 விக்கெட்டுக்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி ஆறுதல் வெற்றிப் பெற்றது. குஜராத் அணியில் அதிகபட்சமாக தமிழக வீரர் ஷாருக்கான் 57 ரன்கள் குவித்தார்.
ஐபிஎல் போட்டியில் லீக் போட்டிகள் முடிவடைவதற்கு முன்னரே ப்ளே ஆஃப் சுற்றுக்கு 4 அணிகள் தகுதிபெற்றன. புள்ளிகளின் அடிப்படையில், குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல்சேலன்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதுவரை நடந்த 17 சீசன்களில் மிகவிரைவாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் தெரிவந்துள்ளதாகவும், இது முதன்முறையாக நடைபெற்றுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இனிவரும் லீக் போட்டிகள் சம்பிரதாய முறைப்படியே நடைபெற உள்ள நிலையில், ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள அணிகளில் எந்த அணி ஐபிஎல் 18 வது சீசனின் வெற்றிக்கோப்பை கைப்பற்றும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
LIVE 24 X 7









