இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்தன. இந்நிலையில், சண்டை நிறுத்த ஒப்பந்தமாகி 4 மணி நேரத்தில், அதாவது நேற்று இரவு 9 மணி அளவில் பாகிஸ்தான் இந்திய எல்லைப்பகுதி கிராமங்களான கதுவா, சம்பா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சேரா உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்து அழித்தது. காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநில எல்லைகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. 3 மாநில எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்திய ராணுவம் முன்னெடுத்துள்ளது.
பாகிஸ்தான் அத்துமீறி இந்தியா மீது தாக்குதல் நடத்தியது குறித்து இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார். அப்போது கூறிய அவர், கடந்த சில மணி நேரமாக எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை இந்திய இராணுவத்தினர் தடுத்து, அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
இந்தியா மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்க இராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், இந்திய அரசிடம் தாக்குதலை நிறுத்த கோரிக்கை விடுத்த நிலையில், மீண்டும் தாக்குதல் நடத்தி வருவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை புரிந்துகொண்டு பாகிஸ்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு பாகிஸ்தான் தான் பொறுப்பு. பாகிஸ்தான் இந்த சூழ்நிலையை சரியாகப் புரிந்துகொண்டு, இந்த ஊடுருவலைத் தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று தெரிவித்தார்.
LIVE 24 X 7









