ஒரே இரவில் பிரபலமான நடிகர்
சயாரா திரைப்படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து அஹான் பாண்டே ஒரே இரவில் பிரபலமாக்கியுள்ளார். 27 வயதான அஹான் பாண்டே இப்போது இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை கொண்டுள்ளார். சயாரா திரைப்படம் வெளியான பிறகு ஃபாலோவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் இதற்கு முன்பு அவருக்கு சுமார் 460,000-480,000 ஃபாலோவர்கள் இருந்தனர். தற்போது, அஹான் பாண்டேயின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்கள் 1.2 மில்லியனாக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் அஹான் பாண்டே இன்ஸ்டாகிராமில் இயக்குநர் மோஹித் சூரி மற்றும் படக்குழுவிற்கு பாராட்டு தெரிவிக்கும் ஒரு விரிவான பதிவை எழுதினார். அதில் "நீங்கள் ஒரு வருடம் முன்பு என்னை சந்தித்திருக்கலாம், ஆனால் உண்மை என்னவென்றால், அதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நான் உங்களை சந்தித்தேன். உங்கள் ஒவ்வொரு படத்தின் கேசட்டுகளையும் நாங்கள் எடுக்கச் சென்றபோது, என் பாட்டியுடன் என் காரில் ஸ்டீரியோ சிஸ்டம் மூலம் உங்களைச் சந்தித்தேன்."
வசூல் சாதனை
"நான் உங்களை சினிமா ஹாலில் என் அம்மா மற்றும் சகோதரியுடன் ஆஷிகி 2 பார்த்துக்கொண்டிருந்தபோது சந்தித்தேன்.
இறுதிவரை அழுதோம், பின்னர் என் அம்மாவுக்காக ஒவ்வொரு வசனத்தையும் மொழிபெயர்க்க வேண்டியிருந்ததால் மீண்டும் அழுதோம். உங்கள் இசைக்கு நான் செய்த டப்பிங் செய்திகளில் உங்களைச் சந்தித்தேன். என் வலியின் தருணங்களிலும் என் அன்பின் தருணங்களிலும் உங்களைச் சந்தித்தேன்” என உருக்கமாக நன்றி தெரிவித்திருந்தார். இந்த போஸ்டுகள் தற்போது வைரலாகி வருகிறது.
சயாரா திரைப்படம் பாலிவுட் பாக்ஸ் ஆப்பிஸில் வசூல் சாதனையை படைத்து வருகிறது. குறிப்பாக முதல் நாள் வசூல் ரூ.21.5 கோடியும், 2வது நாள் ரூ.26 கோடியை வசூலித்தது.
படம் வெளியாகி 4 நாட்களில் மொத்தம் ரூ.105.75 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
வைரலாகும் வீடியோ
யாஷ் ராஜ் பிலிம் தயாரித்துள்ள ‘சயாரா ’ திரைப்படம் இளம் ஜோடிகளுக்கு இடையேயான காதல், போராடும் இசைக்கலைஞர் கிரிஷ் கபூர் (அஹான் பாண்டே) மற்றும் ஆர்வமுள்ள எழுத்தாளர் வாணி பத்ரா (அனீத் பத்தா), ஆரம்பகால அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்குமான காதல், இழப்பு, சோகம், இசை என சயாரா உருவாகியுள்ளது.
imagine surviving a pandemic to see an even more dangerous pandemic 🥲💔#Saiyaara #saiyara pic.twitter.com/qvSehtffCN
— shwwee (@sillyshweta) July 21, 2025
சயாரா திரைப்படத்தை காணும் இளம்ஜோடிகள் மற்றும் இளைஞர்கள் திரையரங்குகளில் உணர்ச்சி பொங்க அழுது புலம்பும் வீடியோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
LIVE 24 X 7









