இயக்குநர் டூ நாயகன்
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், நடிகர் ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் எழுதி இயக்கிய 'லவ் டுடே' என்ற படத்தில் அவரே நாயகனாக நடித்தார். இயக்குநராக மட்டுமல்லாமல், நாயகனாகவும் அவர் அறிமுகமான முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இதன் தொடர்ச்சியாக, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 21, 2025 அன்று வெளியான 'டிராகன்' படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து படங்களை இயக்குவதைத் தவிர்த்து, தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் பிரதீப்.
இரண்டு படங்கள் மோதல்
தற்போது, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இயக்குநர் கீத்தீஸ்வரன் இயக்கத்தில் 'டியூட்' மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ஆகிய இரண்டு படங்கள் தயாராகியுள்ளன. இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் தீபாவளியையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 'டியூட்' படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில், இப்படம் வரும் அக்டோபர் 17, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7









