இந்து மக்கள் கழகம் புகார்:
இந்நிலையில், இந்து மக்கள் கழகத்தின் மாநில தலைவரான ஆர்டிஐ செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ”நடிகர் சந்தானம் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஹிந்து கடவுளான சீனிவாச பெருமாளை அவமதிக்கும் வண்ணத்தில் சீனிவாசா கோவிந்தா என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. கடவுளின் பாடலை அவமதிக்கும் வண்ணத்திலும் நடிகர் சந்தானம் மற்றும் நடிகை நடித்துள்ளனர். இதற்கான காட்சிகளை உருவாக்கிய இயக்குனர் பிரேம் ஆனந்த் மீதும் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்றுள்ள சீனிவாசா கோவிந்தா என்ற பாட்லை நீக்க வேண்டும். திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து திரையரங்கம் முன்பும் இந்து மக்கள் கழகம் சார்பில் போராட்டம் நடைபெறும்" என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை ஆன்லைன் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்பாடல் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், சில தினங்களுக்கு முன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நேரடியாக விளக்கம் தந்தார் நடிகர் சந்தானம். ”பெருமாளை அவமதிக்கும் நோக்கத்தோடு நாங்கள் காட்சியமைக்கவில்லை. சென்சார் போர்ட்டே படத்தினை பார்த்து தணிக்கை சான்றிதழ் வழங்கிய நிலையில், இந்த சர்ச்சை தேவையற்ற ஒன்று. சென்சார் போர்டு, நீதிமன்றம் மாற்றங்கள் கோரினால் நாம் செய்யலாம். ஆனால், ஒவ்வொருவரின் கோரிக்கைக்கும் ஏற்ப பணியாற்ற வேண்டுமென்றால் எப்படி?” என குறிப்பிட்டுள்ளார் சந்தானம்.
DD Next Level டிரைலர் எப்படியிருந்தது?
DD Next Level டிரைலர் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது. டிரைலரின் தொடக்க காட்சியில் ஆளில்லாத தியேட்டருக்குள் பேயாக இயக்குனர் செல்வராகவன் அமர்ந்துள்ளார். தியேட்டருக்குள் நுழையும் நடிகர் சந்தானம் திரையில் ஓடும் திரைப்படத்திற்குள் நுழைகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பது தான்? படத்தின் ஒன்லைன் கதையாக டிரைலர் மூலம் ரசிகர்கள் புரிந்துக் கொள்ள முடிகிறது. டிரைலர் முழு நீள காமெடி திரைப்படம் என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது, மேலும் சந்தானத்தின் டைமிங் காமெடி டிரைலரில் சில இடங்களில் இடம்பெற்றுள்ளன.
Read also: kumudam cinema news
படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் ஒகே என சொல்ல வைத்துள்ள நிலையில், பெரிதும் மதிக்கப்பட்ட இயக்குனர்களான செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் போன்றோரை இந்த மாதிரி கதாபாத்திரங்களில் காண வேண்டிய சூழ்நிலையா? என ரசிகர்களை வருத்தப்படவும் வைத்துள்ளது. தில்லுக்கு துட்டு படத்தினை போல் இதுவும் திரையரங்கில் ஹிட் அடிக்குமா என்பது வருகிற மே 16 ஆம் தேதி தெரிந்துவிடும்.
LIVE 24 X 7









