இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கும் இந்த ஆக்ஷன் பேக்ட் திரைப்படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். குறிப்பாக, வரும் மே 20 அன்று என்.டி.ஆர். பிறந்தநாளன்று படக்குழு எந்த அப்டேட்டும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், என்.டி.ஆரின் 'வார்2' திரைப்படத்தின் அப்டேட் அதே நாளன்று வெளியாகிறது.
இதுகுறித்து படக்குழு பகிர்ந்து கொண்டதாவது, "ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் என்.டி.ஆர். பிறந்தநாளன்று அப்டேட் எதிர்பார்த்துள்ளனர். 'வார்2' படத்தின் பெஸ்ட் மொமண்ட் ரசிகர்களுக்குக் கிடைக்கும். #NTRNeel படத்தின் மாஸ் மிஸில் கிளிம்ப்ஸ் விரைவில் வெளியாகும்” என்றனர்.
பிரஷாந்த் நீல் இயக்கும் ‘என்.டி.ஆர்.நீல்’ திரைப்படம் திரையரங்குகளில் ஜூன் 25, 2026 அன்று தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் பிரஷாந்த் நீல் இந்தப் புதிய படத்தில் என்.டி.ஆருக்கு இன்னும் அதிக மாஸ் சேர்க்க உள்ளார். மதிப்புமிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய திரை அனுபவத்தை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி மற்றும் ஹரி கிருஷ்ணா கோசரராஜு ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக சலபதி பணிபுரிகிறார்.
LIVE 24 X 7









