நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கு ஒன்றில் 'அஃகேனம்' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர்கள் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் திரைப்படத்தின் நடிகர்கள் கீர்த்தி பாண்டியன், ஆதித்யா மற்றும் இயக்குனர் உதய் இசையமைப்பாளர் பரத் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான அருண்பாண்டியன் ஜூலை 4-ல் திரைப்படம் வெளியாகிறது. அறிமுக இயக்குனர் உதய், அறிமுக இசையமைப்பாளர் பரத் ஆகியோரால் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் பெரும்பாலான புது முகங்கள் நடித்துள்ள நிலையில், திரில்லர் படமாக அமைந்துள்ளது. அஃகேனம் திரைப்படம் 200 திரைகளில் ரிலீஸ் செய்ய எற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனது சொந்த ஊரில் இந்த திரைப்படத்தை விளம்பரபடுத்துவதில் மிகவும் சந்தோசமாக உள்ளதாக தெரிவித்தார்.
கருத்துக்கள் இல்லாமால் படம் படமாக எடுக்கப்பட்டுள்ளது. அதிகளவிலான பொருட்செலவில் எடுக்காவிட்டாலும் அதற்கு இணையாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. கருத்து சொல்லவோ பாடம் எடுக்கவோ இந்த படம் எடுக்கப்படவில்லை. இந்த கதை உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
2 மணி நேரம் இந்த படம் மக்களை பொழுதுபோக்க வைக்கும் படமாக அமையும் என தெரிவித்தார். திரைப்படங்களை அதிக திரைகளில் வெளியிடுவதால் நூறு நாட்களில் கிடைக்கக்கூடிய வசூல் குறுகிய நாட்களில் கிடைத்து விடுகிறது. இப்போது ஓ.டி.டி மற்றும் டிவிகளில் திரைப்படங்கள் வெளியாகும் என்ற நம்பிக்கையில் அதிகளவு பொதுமக்கள் இருக்கின்றனர்.
அஃகேனம் திரைப்படத்தின் இசை வெளிநாடுகளில் கம்போஸ் செய்யப்பட்டது. திரைப்படங்கள் நன்றாக இருந்தால்100 நாட்கள் வசூல் பத்து நாட்களிலேயே கிடைத்து விடுகிறது என தெரிவித்தார் மீண்டும் அரசியலில் உங்கள் பயணம் இருக்குமா என செய்தியாளர்களின் கேள்விக்கு அரசியலின் பக்கத்திற்கு கும்பிடு போட்டு விட்டேன் என இரண்டு கைகளையும் உயர்த்தி அருண்பாண்டியன் செய்த செயல் அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது. நடிகர் அருண்பாண்டியன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LIVE 24 X 7