பேசாத கதைக்களம்:
இந்த பூமியில் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு பாதையை வாழ்க்கையாக தேர்ந்தெடுக்கிறார்கள். அன்பின் பாதை எல்லா உயிருக்கும் உரிமையானது. மரியா ஒரு கன்னியாஸ்திரி பெண், அவள் ஒரு சாதாரண பெண்ணைப் போல வாழ விரும்புகிறாள், ஆனால் சமூகமும் அவளைச் சுற்றியுள்ள மக்களும் அதை கடினமாக்குகிறார்கள். அவளின் அன்பு ஜெயிக்கிறதா? அவள் கனவு நனவானதா? என்பதே இப்படத்தின் கதைகளம்.
ஒவ்வொரு தவறுக்குப் பின்னும் ஒரு நியாயம் உண்டு, அந்த நியாயத்தை அழுத்தமாக பேசும் ஒரு அழகான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் மற்றும் சிதம்பரம் பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் அறிமுக நடிகை "சாய்ஸ்ரீ பிரபாகரன்" முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். "பவேல் நவகீதன்" ஒரு மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், சித்து குமரேசன், விக்னேஷ் ரவி சுதா புஷ்பா, ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது:
"மரியா" திரைப்படம், உலகில் உள்ள பல முக்கியமான சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்றுள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இத்தாலி, மலேசியா, லண்டன், நேபாளம், புது தில்லி, ஹரியானா, மும்பை, கேரளா, உத்தரபிரதேசம், கொல்கத்தா போன்ற பகுதிகளில் நடைப்பெற்ற திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த விழாக்களில் ஒட்டுமொத்தமாக "சிறந்த இந்திய திரைப்படம்", "சிறந்த இயக்குனர்", "சிறந்த திரைக்கதை", "சிறந்த நடிகை", "சிறந்த இசை" என பல விருதுகளையும் வென்று குவித்துள்ளது. உலகமெங்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. மேலும் இப்படத்தின் அனைத்து மொழி டிஜிட்டல் ரைட்ஸ், திரையரங்கம் ரைட்ஸ், சேட்டிலைட் உரிமைகளையும் Uthraa Productions சார்பில் செ.ஹரி உத்ரா வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு ஜி. மணிஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், கோபாலகிருஷ்ணன் & பரத் சுதர்ஷன் ஆகியோர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
LIVE 24 X 7









