`வீரா ராஜா வீரா` பாடலின் பதிப்புரிமை தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், தனி நீதிபதி ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார். அதில், அவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்திருந்ததுடன், ரூ.2 கோடியை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், அந்தப் பாடலின் ஆன்லைன் தளங்களில் தாஹர் சகோதரர்கள் பெயரை கிரெடிட்டாகக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தனி நீதிபதி பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம், `இசைப்புயல்` ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தப் பதிப்புரிமை வழக்கில் ஒரு பெரிய சட்ட வெற்றி கிடைத்துள்ளது.
LIVE 24 X 7









