ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ‘தக் லைஃப்’ திரைப்படம் வருகிற ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு செர்பியா, அயர்லாந்து, ராஜஸ்தான், டெல்லி, கோவா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம்-கமல் கூட்டணி இணைந்துள்ளதால் 'தக் லைஃப்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ஜிங்குச்சா..’(Jinguchaa) பாடல் நாளை (ஏப்.18) வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், இந்த பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
One BEAT
— Silambarasan TR (@SilambarasanTR_) April 16, 2025
Two THUGS#ThugLife brings the real anthem
A #ManiRatnam Film
An @arrahman Musical
Thuglife first single #Jinguchaa releasing on April 18 #JinguchaaApril18 #Jinguchaafirstsingle #ThuglifeFromJune5 #KamalHaasan… pic.twitter.com/HxtKQwqrF8
LIVE 24 X 7









