ஸ்கூல்ல படிக்கிறப்ப 'நீ பெரிய ஆளாகி என்னவாகப் போற?'ங்கிற கேள்வியை நாம எல்லாரும் சந்திச்சிருப்போம். அதுல முக்கால்வாசி பேர் 'நான் கலெக்டராவேன்'ன்னு சொல்லுவாங்க. அந்த கனவு மட்டும் பலிச்சிருந்தா வீட்டுக்கு ரெண்டு கலெக்டர் நாடு முழுக்க இருப்போம். நல்ல வேளை அப்படி எல்லாம் பலிக்கிறதுக்கு கடவுள் விடுறதில்லை.
ஆனா, காக்கா தோப்பு பாலாஜி விஷயத்துல அவர் கனவை நிறைவேத்துன கையோடு தண்ணி தெளிச்சும் விட்டுட்டாப்ல கடவுள். ஆமா, 'நான் பெரிய ரவுடியாவேன். என்னை பார்த்தா ஊரே நடுங்கணுமின்னு ஸ்கூல்ல படிக்கிறப்பவே ஏரியா முழுக்க யூரியா வீசுன மாதிரி பேசிட்டு திரிஞ்சவர்தான் இந்த பாலாஜி. அவர் கனவு கண்டதைவிட பல மடங்கு பகீர் ரவுடியாக உருவெடுத்தார். பல வருடங்கள் சென்னையை ஆட்டி வைக்கணும்னு நினைச்ச இந்த காக்காதோப்பு பாலாஜி, சமீபத்துல போலீஸ் டப்புன்னு கட பொட்டுன்னு போயிட்டாப்ல.
சென்னை சிட்டியின் ஏழு கிணறு ஏரியா காக்காதோப்புதான் பாலாஜியின் சொந்த ஏரியா. பொழுது விடிஞ்சு பொழுது அடையும் வரை பொருளு பொறம்போக்கு, போட்டுத்தள்ளு' என்று அருள் வார்த்தைகளாக பேசிக்கொண்டிருந்த காக்கா தோப்பு பாலாஜியின் ஆகி அந்தங்களை தெரிந்து வைத்திருக்கும் அந்த டெபுடி கமிஷனரை டி.ஜி.பி அலுவலகத்தில் சந்தித்தோம்.
ஜன்னல் வழியே மெரீனாவுக்கு முகம் கொடுத்தபடி விவரிக்கத் தொடங்கினார். “கிரிமினல்கள் பிறப்பதில்லை. உருவாக்கப் படுறாங்கங்கிறதுக்கு பக்கா உதாரணம் இந்த பாலாஜி. சொல்லப்போனால் சிலர் தங்களை கிரிமினல்களாக உருவாக்கிக்கொள்கிறார்கள் இல்லையா, அந்த ரகம்தான் இவன்.
ஒன்பதாவது படிக்கிறப்பவே. பெரிய தாதாவாகணும்ன்னு முடிவு பண்ணவன் அவன். சின்ன வயசுலேயே அடிதடின்னு சுத்திட்டு திரிஞ்சவன் போலீஸ் கையில சிக்கி கேஸும், பரேடும் வாங்கியும் திருந்தல தாதாவா இருந்தால் தன்னைப் பார்த்து எல்லாரும் பயப்படுவாங்கங்கிற போதை அவனுக்கு தலைக்கேறியிருக்குது. அதனால பெரிய பெரிய ரவுடிகளா பார்த்து பழக்கம் வெச்சுக்க ஆரம்பிச்சிருக்கான். 1990களில் வியாசர்பாடி ஏரியாவுல இருந்து அட்ராசிட்டி பண்ணிட்டிருந்த நாகேந்திரன், துரை, காக்காதோப்பு ஏரியாவைச் சேர்ந்த ரவுடிகளான யுவராஜ் இன்பராஜ்ன்னு கிரிமினல்ஸா பார்த்து சேர்க்கை வெச்சுக்கிட்டான்.
அவங்ககூட சேர்ந்து கூலிப்படை பொழப்புக்கு போறது. அவங்க பண்ற மிரட்டல் உருட்டல் ட்ரிக்ஸை சுத்துக்கிறதுன்னு டெக்னிக்கலா வளர ஆரம்பிச்சான் பாலாஜி, தண்டல் வசூலிக்கிறதுல தொடங்கி கொலைக்கு ஸ்கெட்ச் போடுறது வரை எல்லாத்தையும் துல்லியமா சுத்துகிட்டான். அப்புறம் தன்னோட தொழில் குருக்களான யுவராஜ், இன்பராஜுடன் சேர்ந்து மூலக்கொத்தளம் ஏரியா ரவுடி ஒருத்தனோட அண்ணன் புஷ்பாவை கொலை பண்ணினான். இதுதான் பாலாஜியின் முதல் கொலை.
இந்த கொலைக்குப் பிறகு அவனோட பெயர் போலீஸ் டிபார்ட்மென்ட்லயும், ரவுடிகள் வட்டாரத்துலேயும் பரவ ஆரம்பிச்சுது. வெறும் பாலாஜின்னா மாஸா இருக்காதுன்னு தன் பெயரை காக்காதோப்பு பாலாஜின்னு அடையாளப்படுத்திகிட்டான். இந்த அடைமொழியை சேர்த்த நேரம் பாலாஜிக்கு தனியாவே அசைன்மென்ட்ஸ் வர ஆரம்பிச்சுது. பாலாஜிட்ட நிறையப் பசங்க சேர்ந்தானுங்க கஞ்சா, கள்ளச்சாராயம் கடத்தல்லேயும் இறங்கியிருக்கான் பாலாஜி.
கையில நல்ல காசு புரள ஆரம்பிச்சதும் இவன் காட்டுன கெத்துல மத்த ரவுடிங்க டென்ஷனாக ஆரம்பிச்சாங்க. குறிப்பா, யுவராஜ் ரொம்பவே இவனை உரச ஆரம்பிச்சிருக்கான். எனக்கு கையாளா இரு என்னை தாண்டணும்னு நினைக்காத சொருவிடுவேன்'ன்னு யுவராஜ் ஒரு தடவை எச்சரிச்சதால டென்ஷனான பாலாஜி, அவன் கதையை முடிக்க முடிவு பண்ணினான். நினைச்ச மாதிரியே யுவராஜை போட்டுத் தள்ளுச்சு இவன் டீம். யுவராஜையே கொன்னுட்டான்டா காக்காதோப்பு பாலாஜின்னு ரவுடிங்க வட்டாரத்துல பெரிய பரபரப்பு.
இந்த கேஸ்ல உள்ள போனப்பதான் பல மாவட்ட ரவுடிகளின் பழக்கம் பாலாஜிக்கு உருவாகியிருக்குது. குறிப்பா, டெல்டாவின் மணல்மேடு சங்கர் மாதிரியான ஆளுங்களோட பழக்கம் உருவாகியிருக்குது. அதுக்குப் பிறகு ரெண்டு தரப்புமே ஆட்கள், பொருட்களை பரிமாறிக்க ஆரம்பிச்சிருக்காங்க டெல்டா ஆளுங்க வடக்குக்கு வந்து சம்பவம் பண்ணிட்டு போறது, சென்னை ரவுடிங்க தெற்குக்கு போயி சைலன்டா போட்டுத் தள்ளிட்டு வர்றதுன்னு பெரிய நெட்வொர்க்கா செயல்பட ஆரம்பிச்சிருக்கானுங்க.
பணம் பண்ணுற வழி கட்டப்பஞ்சாயத்துதான் அப்படிங்கிறதுல தெளிவா இருந்திருக்கான் பாலாஜி. இந்த நேரத்துலதான் சென்னை சிட்டியும் விஸ்வரூபமா வளர்ந்துட்டு இருந்துச்சு. காம்ப்ளக்ஸ் கட்டுறதுக்கு. அப்பார்ட்மென்ட் கட்டுறதுக்கு மெயின் ஏரியாக்களை டார்கெட் பண்ணினாங்க தொழிலதிபர்கள். அந்த இடங்களை பரம்பரையா வெச்சிட்டிருக்கிறவங்களை உருட்டி மிரட்டி அடிச்சுப் பிடுங்கி தர பாலாஜி மாதிரியான ரவுடிங்களை முழுமையா பயன்படுத்தினாங்க. நல்லா சம்பாதிச்சு கொழுத்து திரிஞ்சுது இந்த கோஷ்டிகள். எத்தன தடவை தூக்கி உள்ளே வெச்சாலும் மீண்டும் மீண்டும் வந்து அட்ராசிட்டி பண்றதுதான் பாலாஜியோட அடையாளம்னு ஆகிப்போச்சு.
ஒரு கட்டத்துக்கு மேல தொழில் போட்டின்னு வந்துட்டா கொலை பண்ற தாதாவா மாறுனாள் பாலாஜி. அவன் பண்ணுன குரூர சம்பவங்களில் எங்க டிபார்ட்மென்டால மறக்க முடியாததுன்னா ஒரே நாள்ல அடுத்தடுத்து பண்ணுன ரெண்டு கொலை வட சென்னைக்காரன் பில்லா ரமேஷை அவன் வீட்டுக் கூரையை உடைச்சு இறங்கி, அவன் மனைவி கண்ணு முன்னாடியே வெட்டி கொல்லுச்சு பாலாஜி டீம். அதே நாள்ல சில மணி நேரங்கள் கழிச்சு இன்னொரு ரவுடியான விஜியை போட்டுத் தள்ளுனான் பாலாஜி. அடுத்தடுத்து நடந்த இந்த ரெட்டைக் கொலைகள்ல சென்னை அதிர்ந்துச்சு.
தொடர் கொலைகள் மூலம் ரவுடி லெவல்ல இருந்து தாதாவாக உருமாறியிருந்தான் பாலாஜி கஞ்சா கடத்தல்ல எல்லாம் பெருசா பணம் புழங்கலைன்னு ஆந்திரா பக்கம் தனக்கு இருந்த தொடர்பைப் பயன்படுத்தி செம்மரக் கடத்தல்லேயும் கால் வெச்சான். திருமலை சுற்றுவட்டார வன ஏரியாவுல செம்மரக் கடத்தலுக்கு பழைய நபர்களைப் பயன்படுத்தினால் ஈஸியா செக்போஸ்ட்ல சிக்கிடுறாங்கன்னு தமிழ்நாட்டில் இருந்து புது கூலியாட்களை தேடினாங்க ஆந்திர கடத்தல் பேர்வழிகள். இவங்க கூட டை அப் வெச்சுக்கிட்டு சென்னை, காஞ் சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்ல இருந்து கூலியாட்களை அனுப்புறதும் அதுல கமிஷன் பார்க்கிறதும் பாலாஜியின் எக்ஸ்ட்ரா வருமானமா மாறுச்சு.
பாலாஜியின் காட்டுத்தனமான வளர்ச்சிக்கு எங்க டிபார்ட்மென்ட்டும் காரணம்ன்னு ஒரு தகவல் உண்டு. அதாவது பாலாஜி நேரடியாவும். அவனது ஸ்கெட்ச் மூலமாவும் போட்டுத்தள்ளுனதுல கணிசமான பேர் ரவுடிங்கதான். ஆக இவனை வளர்த்துவிட்டும், சுண்டுக்காம விட்டும் ரவுடிங்க டீமை போலீஸ் அழிச்சுது. அவன் ரவுடிகளையே கதறவிட்ட ரவுடின்னும் ஒரு நியாய கதை பேசுவாங்க.
பாலாஜி மாதிரியான ரவுடிங்க தங்களோட பாதுகாப்புக்காக அரசியல் சாயத்தை பூசிப்பானுங்க. அரசியல் புள்ளிகளும் தங்களோட வேலைகளுக்கு இவனை மாதிரி ஆளுங்களை பயன்படுத்திப்பாங்க. பாலாஜியும் இப்படித்தான் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னோட அரசியல் சாயத்தை மாத்தி பூசிட்டு தப்பிச்சுப்பான். ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டப்ப தன்னோட அடிப்பொடி படையோடு அவருக்கு ஆதரவா பிரசாரத்துக்கெல்லாம் போனான். 'கொலைகாரனுங்க பிரசாரத்துக்கு இறங்கி ஓட்டு கேக்குற அளவுக்கு சென்னை நிலைமை இருக்குதுன்னு கேவலமா விமர்சனம் வெடிச்ச பிறகு எங்க டிபார்ட்மென்ட் அவனை தூக்கி உள்ளே வெச்சுது.
குண்டாஸ்ல போட்டும். கை காலை உடைச்சுவிட்டும் கூட அவளோட கொட்டமும் குரூரமும் அடங்கல. கணிசமான கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உட்பட அவன் மேலே சுமார் அறுபது வழக்குகள் இருக்குது. கடந்த கொஞ்ச நாளாவே தலைமறைவா இருந்துட்டு அப்பப்ப வெளியில வந்து அட்ராசிட்டி பண்ணிட்டிருந்தான்.
பாலாஜியின் தீராத பகைவர்களில் முக்கியமான ரவுடிகள் சிலர் உண்டு. அதுல செந்தில் முக்கியமான ஆள். கொஞ்சம் அசந்தா தன்னை போட்டுடுவான்னு சொல்லி காக்காவை முடிக்கிறதுக்கு பல ஸ்கெட்ச் போட்டான். நாலு வருஷத்துக்கு முன்னாடி தேனாம்பேட்டை ஸ்டேஷன் முன்னாடி பாலாஜியும் இன்னொரு ரவுடியும் போன கார் மேலே நாட்டு குண்டு வீசி. தாக்கினாங்க. ஆனாலும் தப்பிச்சிட்டான் பாலாஜி.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுத்தி சுத்தி பார்த்தா பாலாஜியின் கையும் இருக்கலாம்னு எங்க டிபார்ட்மென்ட் விசாரிச்சிட்டு இருந்துச்சு. காக்காவை போட்டுத்தள்ள அவனது பகை கூட்டம் ஒரு பக்கம் தேடிட்டு இருக்க போலீஸுக்கு கல்தா கொடுத்துட்டு சில சம்பவங்களை பண்றதுக்காக கடந்த செப்டம்பர் 18ம் தேதி அதிகாலை சென்னைக்குள் நுழைஞ்சான் பாலாஜி. அவனை அடையாளம் கண்டு எங்க டிபார்ட்மென்ட் துரத்தியதால் தப்பிச்சவன், ஒரு முட்டுச்சந்தில் சிக்கிய நிலையில் ஆயுதத்தை பிரயோகிக்க என்கவுன்டர் செய்யப்பட்டான் எந்த வியாசர்பாடி மண்ணில் காக்கா பாலாஜியின் அட்ராசிட்டி தொடங்கியதோ அதே மண்ணில் அவன் கதையும் முடிக்கப்பட்டிருக்குது" என்றபடி லெமன் டீயை கையில் எடுத்தார்.
காக்காதோப்பு பாலாஜி ரணகளமாக போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க, அவருக்கு ஆதரவாக வடசென்னை டீம் ஒன்று கிளர்ந்து எழுந்தது ஆச்சரியம் அவரின் அம்மா கண்மணி, இது பொய் என்கவுன்டர்பா. பத்து வருஷமா அவன் எந்த தப்புதண்டாவுக்கும் போகல. அறக்கட்டள வெச்சுகினு இஸ்கூல் புள்ளைங்களுக்கு உதவுனான். உடல்தானம் பண்ணின அவன இப்படி சிதைச்சுடுச்சே போலீஸ் என்று கொதிக்கிறார்.
பலரை உயிர்தானம் பண்ண வெச்ச ஏ பிளஸ் ரவுடியான காக்காதோப்பு பாலாஜி, உடல் தானம் பண்ணியிருப்பதெல்லாம் வேற லெவல் தியாகம்பா!
(ரத்தம் தெறிக்கும்) - எஸ். ஷக்தி .