இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக மருத்துவரணிச் செயலாளர் டாக்டர் கோசல்ராமிடம் பேசினோம். "தரத்துக்கும் மாவட்ட அதிமுகவை பொறுத்தவரை அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பிறகு ஐந்து வருடங்கன் மாவட்டச் செயலாளராகவும் அமைச்சராகவும் இருந்தவர் கடம்பூர் ராஜு மட்டுமே சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தொடக்கப் பள்ளியின் ஆசிரியராக இருக்க கடம்பூர் ராஜு, இன்று செல்வாக்கான நபராக வலம்வருகிறார் என்றால் அதற்கு அதிமுகதான் காரணம் 2021 சட்டமன்றத் தேர்களில் கோவில்பட்டி தொகுதியில் அவரை எதிர்த்து டிடிவி தினகரன் போட்டியிட்டார் அன்று தினகரனை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று எடப்பாடி விரும்பினார்.
அதற்காக மற்ற தொகுதிகளைவிட கோவில்பட்டியை தனியாக கவனித்தார். அதிமுக தொண்டர் பம்பரமாக உழைத்தார்கள் அதனால் தினகரனை வீழ்த்தி கடம்பூர் ராஜு வெற்றிபெற்றார். அதனாலேயே அவருக்கு எடப்பாடி அதிக மரியாதை கொடுத்தார் அந்த நன்றியை எல்லாம் இன்று மறந்து. தவெகவில் இணைந்துவிட்டார்.
கடம்பூர் ராஜுவை வறுத்தெடுக்கும் எம்.ஜி.ஆர்., ஜெ. விசுவாசிகள்
அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மா.செ.வாக இருந்தவரை அதிமுகவின் கோட்டையாக தூத்துக்குடி மாவட்டம் இருந்தது. அதை தகர்த்ததில் கடம்பூர் ரஜுவுக்கு முக்கிய பங்கு உண்டு ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து கிராமத்தில் போராட்டம் தொடங்கியது. அப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சராக இருக்க கடம்பூர் ரஜுவுக்கு ஒருநாள்கூட போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் அவர் முயற்சிகளை அதானல் தான் போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக மாறி துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவிகள் பலியானார்கள். அந்த சம்பவத்திற்குப் தூத்துக்குடியில் அதிமுகவில் செல்வாக்கு மளமளவென சரிந்துவிட்டது
இதன் இடையே நடந்த சட்டமன்ற தேர்தலில் கடற்கரைப் பகுதியில் அதிமுகவுக்கு ஒற்றை இலக்கத்தில்தான் ஓட்டு கிடைத்தது. இந்த அவலநிலைக்கு கட்சியை ஆளாக்கியவர் கடம்பூர் ராஜு அவர் நல்ல அமைச்சராக செயல்பட்டிருந்தால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நடத்திருக்காது அந்த தொழிற்சாலையும் மூடப்பட்டிருக்காது.
அதிமுகவுக்கு இவ்வளவு துரோங்களை செய்துவிட்டு தேர்தலில் தோற்றவுடன்'விஜய் கட்சியில் போய் இணைந்துகொண்டார்.
அதுவும் மூடியிருந்த கேட்டை முட்டி தள்ளி அவர் அழைந்தது கோவில்பட்டி உள்ளடக்கிய தூத்துக்குடி மாவட்டம் அ.தி.மு.கவுக்கே அவமானத்தை தேடி தந்துவிட்டது அந்த கோபத்தில்தான் அவரை எதிர்த்து அதிமுகவினர் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். அவருடன் உள்ள ஒரு கட்சி நிர்வாகிகூட செல்லவில்லை எந்தளவுக்கு கோசல்ராம் கட்சிக்காரர்களை அவர் மதிக்காமல் இருந்திருக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி என்று சொல்லி நிறுத்தினார்.
இதற்கு கடம்பூர் !ராஜு பதில் இருக்கிறதா? நாம் அவரை தொடர்புகொண்டபோது நமது அழைப்பை ஏற்கவில்லை. அவரின் ஆதரவாளர்களோ, 'தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை மற்ற எல்லோரையும்விட அதிமுக வளர்ச்சிக்கு அதிகமாக உழைத்தவர் கடம்பூர் ராஜு நான்காவது முறையாக தேர்தலில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.
இந்த நேரத்தில் அதிமுகவில் இருந்த 25 எம்எல்ஏக்கள் விஜய் கட்சிக்கு ஆதரவு அளிக்க முன் வந்தனர். அவர்களுடன் பல மாவட்டச் செயாளர்களும் சென்றனர். கடம்பூர் ராஜ உட்பட அனைத்து மாவட்டச் செயலாளர்களுடன் தொடர்புகொண்டு எடப்பாடி ஆதரவாளர்கள் பேசினார்கள் கடம்பூர் ராஜுவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்ப்பட்டிருந்ததால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை அதனால் அவர்மீது எடப்பாடிக்கு சந்தேகம் வந்தது. தொடர்ந்து கடம்பூர் ராஜுவின் ஆதரவாளர்களாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் மோகன் சின்னப்பன் ஆகியோரிடம் நாங்கள் எடப்பாடி அணியில் இருக்கிறோம்' என்று எழுதி வாங்கினார்கள் இது கடம்பூர் ராஜுவுக்கு மனவருத்தத்தை எற்படுத்திவிட்டது. அதனால்தான் அவர் தவெகவில் இணைந்தார் என்றார்கள்.