வீடியோ ஸ்டோரி

சேலத்தில் பிரபல ரவுடி முகத்தை குறி வைத்து நடந்த கொடூரம் - குவிந்த போலீஸ்

By leninakathiya
09 Nov 2024, 01:44 AM
சேலம் மாவட்டம் பனங்காடு பேருந்து நிறுத்தம் அருகே பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் பனங்காடு பேருந்து நிறுத்தம் அருகே பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பட்டறை சரவணன் என்பவர், வெள்ளாளம்குண்டத்தில் பீரோ பட்டறை நடத்தி வந்துள்ளார். இவர் மீது காரிப்பட்டி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது. இந்நிலையில், அவர் கடையிலிருந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்ற போது, பின்னால் காரில் வந்த மர்ம கும்பல் ஆட்டோவை வழிமறித்து சரவணனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.