Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

காரை இயக்கிய சிறுவன்...தூக்கி வீசப்பட்ட இருவர்...அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

By Jayakumar
08 Apr 2025, 03:26 PM
மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் இயக்குவது, அலட்சியமாக செயல்பட்டு பிறருக்கு ஆபத்தை விளைவித்தல், மோட்டார் வாகன சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கார் மோதி விபத்து

வடபழனியை சேர்ந்த சாம் என்பவர் தனது 14 வயது மகனிடம் கார் சாவியை கொடுத்து குமரன் நகர் 7வது தெருவில் நிறுத்தி வைத்துள்ள காருக்கு கவர்போட கூறியுள்ளார்.
ஆனால் மகன் தனது நண்பருடன் குமரன் நகர் மெயின் ரோடு வழியாக காரை இயக்கிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்றிருந்த இரண்டு பேர் மீது மோதி அதன் பின்பாக அங்கிருந்து ஆட்டோ மற்றும் மரத்தின் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் மகாலிங்கம் மற்றும் கங்காதரன் ஆகியோர் காயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வழக்குப்பதிவு

பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார், 14 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை சாம் ஆகிய இரண்டு நபர்களின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் இயக்குவது, அலட்சியமாக செயல்பட்டு பிறருக்கு ஆபத்தை விளைவித்தல், மோட்டார் வாகன சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.