Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சென்னையில் கஞ்சா... இவங்களையும் விட்டுவைக்காத கும்பல்... அதிர்ச்சி ரிப்போர்ட்

By VASUKI
13 Nov 2024, 11:25 PM
கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த கேரளாவை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை வடபழனி, சூளைமேடு, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களை குறிவைத்து போதை பொருள் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சென்னை தெற்கு மண்டல போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கிடைத்த ரகசிய தகவல்களை அடிப்படையில் அசோக் நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்பொழுது சந்தேகத்தின் பேரில் ஒருவர் கருப்பு கலர் டிராவல் பேக் ஒன்றை மாட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தபோது அவரை போலீசார் அழைத்து விசாரணை செய்தனர். பின்பு அவர் வைத்திருந்த பொருட்களை சோதனை செய்த பொழுது  கஞ்சா வைத்திருந்ததை கண்டறிந்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடமிருந்த கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

போலீசாரின் தொடர் விசாரணையில், அந்த நபர் கேரள மாநிலத்தை சேர்ந்த ஆஸ்கர் தயட்டு சித்ரா என்பதும் அவர்,  பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் என்பது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் அவர் வடபழனி,  சூளைமேடு, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில்  கட்டுமான பணியில் ஈடுபடும் தொழிலாளர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. 

கைது செய்யப்பட்ட ஆஸ்கர் தயட்டு சித்ரா என்பவரிடம் 3 கிலோ கஞ்சா மற்றும்  விற்பனைக்கு பயன்படுத்தப் பட்ட  மொபைல் போன் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஆஸ்கர் தயட்டு சித்ராவிற்கு தொடர்புடைய கஞ்சா விற்பனை கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நாளுக்கு நாள் சென்னையில் போலீசார் தொடர்ந்து இதுபோன்று கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து கைது செய்து வரும் நிலையில், கட்டுமான தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் சாதாரண பொதுமக்களையும் குறிவைத்து கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெறுகிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.