Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

பாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த பேரன்...நாடகமாடியது அம்பலம்

By Jayakumar
24 Jun 2025, 09:57 PM
பாட்டியை கொலை செய்து விட்டு கோவிலில் மொட்டை அடித்து கொண்டு மனைவியின் ஊரில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓமலூர் அருகே குடிபோதையில் பணம் கேட்டு தர மறுத்த பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டு மொட்டை அடித்து நாடகமாடிய இளைஞரை தாரமங்கலம் போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

மூதாட்டி கொலை

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த தாரமங்கலம் அருகே தெசவிளக்கு ஊராட்சி சின்னப்பிள்ளையூர் பகுதியை சேர்ந்த சின்னப்பிள்ளை, 74 வயதானவர் இவர் கணவன் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார்.

இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ள நிலையில் அனைவருக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இந்நிலையில் இவர் கடந்த 20ஆம் தேதி மாலை மர்மமான முறையில் அவரது வீட்டில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

பாலியல் பலாத்காரம் செய்து கொலை

இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டியின் மகன் ராமகவுண்டர் கொடுத்த புகாரின் தாரமங்கலம் போலீசார் மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து மூதாட்டியின் கழுத்தில் காயம் இருந்ததாகவும், அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் மருத்துவ அறிக்கை வந்தது. இந்த அறிக்கையை பார்த்த தாரமங்கலம் போலீசார் அதிர்ச்சியடைந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

பேரன் கைது

அப்பொழுது மூதாட்டியின் மகளின் மகன் பிரகாஷ்(31) பாட்டியை அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்த நிலையில் கடந்த 20ஆம் தேதி பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். பின்பு மூதாட்டியிடம் 2ஆயிரம் ரூபாய் கேட்ட போது அவர் கொடுக்க மறுத்ததால் பாலியியல் பலாத்காரம் செய்து அவர் கொலை செய்ததை கண்டறிந்தனர்.

இதனிடையே பிரகாஷ் பாட்டியிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு திருச்செந்தூர் சென்று முருகன் கோவிலில் மொட்டை அடித்து கொண்டு மனைவியின் ஊரான பெரியேரிப்பட்டி பகுதியில் இருந்துள்ளார். அப்பொழுது தாரமங்கலம் போலீசார் இளைஞரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.