தமிழ்நாடு

கனவா.. கனவா.. நான் காண்பது கனவா.. 70 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

By VASUKI
11 Apr 2025, 10:19 AM
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,745 க்கும், சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,960க்கு விற்பனையாகிறது.
பங்குச்சந்தை வீழ்ச்சியின் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த வாரம் 65 ஆயிரத்திற்கு விற்பனையான நிலையில், கடந்த 2 நாளாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. தொடர்ந்து, இன்றும் தங்கம் விலை இன்றும், சவரனுக்கு ரூ.1480 அதிகரித்து ரூ.69,960 க்கு விற்பனையாகிறது. இந்திய பங்குச் சந்தைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியினை தொடர்ந்து சந்தித்து வந்த நிலையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்தது. பங்குசந்தைகளில் ஏற்படும் சரிவு காரணமாக, பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான முதலீடு விரும்புகின்றனர். அதன் காரணமாகவே தங்கத்தின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. பங்குச்சந்தைகளில் ஏற்படும் மாற்றத்தினால் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டது. ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கத்தின் விலை திடீரேன்று ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பரஸ்பர விதி

கடந்த ஜனவரி மாதம் முதல் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்ட நிலையில், ஏப்ரல் 1 ஆம் தேதி அமெரிக்கா அதிபர் டிரம்ப், இந்தியா, சீனா உட்பட மற்ற நாடுகள் மீது பரஸ்பர வரி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதனால், உலகளவில் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் 9 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளதால், தங்கம் விலையிலும் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்படுகிறது.

பாதுகாப்பான முதலீடு

பொதுவாகவே மக்களிடம் தங்கத்தில் முதலீடு செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. பங்குசந்தைகளில் ஏற்படும் சரிவு காரணமாக அனைவரும் பாதுகாப்பான முதலீடு செய்ய விரும்புவது தங்கத்தில் தான். கடந்த வாரம் முழுவதும் தொடர் சரிவை சந்தித்துவந்த தங்கம் விலை, கடந்த 3 நாட்களாக தொடர்ந்து ஆயிரக்கணக்கில் அதிகரித்து, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,745 க்கும், சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,960க்கு விற்பனையாகிறது.