தமிழ்நாடு

குடியாத்தத்தில் மிளகாய் பொடி தூவி கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

By Jayakumar
24 Sep 2025, 03:15 PM
குழந்தை கடத்தில் விவகாரத்தில் போலீசார் விரைந்து செயல்பட்டு 2 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டனர்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியில் பவள தெருவில் சாப்ட்வேர் இன்ஜினியர் தொழில் செய்யும் வேணு என்பவர் தனது 4 வயது மகனை உணவு இடைவேளைக்காக பள்ளியில் இருந்து அழைத்து வந்து வீட்டு வாசலில் நின்றுள்ளார்.

குழந்தை காரில் கடத்தல்

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மிளகாய் பொடியை வாரி முகம் மற்றும் கண்ணில் தூவி 4 வயது குழந்தையை தந்தையின் கண்முன்னே காரில் கடத்தி சென்றனர்.

கர்நாடக மாநில பதிவெண் கொண்ட வெள்ளை நிற சொகுசு காரில் கடத்தியதை கண்ட தந்தை வேணு பதறி கூச்சலிட்ட நிலையில், மின்னல் வேகத்தில் கார் சென்றுள்ளது.இதனால் மிகுந்த பதற்றத்துடன் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார்.

போலீசார் தீவிர விசாரணை

விரைவாக செயல்பட்ட குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்து உஷார்படுத்தியதன் அடிப்படையில், மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. நான்கு திசையிலும் காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு கார் சென்ற இடங்களை ஆய்வு செய்து தேடினர்.

மேலும், நகரின் மையப் பகுதியில் குறுகலான சாலையில் வீட்டின் வாசலில் குழந்தையை காரில் கடத்தி சென்றனர். இந்த நிலையில் 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மாதனூர் பகுதியில் 2 மணி நேரத்தில் குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர்.