Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக முற்றுகை போராட்டம்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு

By nagalekshmi
27 Dec 2024, 02:40 PM
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரும் அவரது காதலனான மாணவன் ஒருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் தனிமையில் இருப்பதை தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்த ஞானசேகரன், மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, அந்த மாணவி கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

ஆதாரங்களின் அடிப்படையில் ஞானசேகரனை கைது செய்த காவல்துறையினர் சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுல்தான் ஹர்கான், ஞானசேகரனை ஜனவரி 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். திமுக பிரமுகர் ஞானசேகரனுக்கு   இடது கை மற்றும் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வெளியான முதல் தகவல் அறிக்கையில், தாங்கள் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன் மற்றும் பேராசிரியரிடம் காண்பித்து டிசியை தரவைப்பேன் என ஞானசேகரன் மிரட்டியதாகவும், அலைபேசியில் இருந்த தனது தந்தை செல்போன் எண்ணை எடுத்துக் கொண்டு அவருக்கு வீடியோ அனுப்பி விடுவதாக மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு அடிபணியவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் எனக்கூறி வலு கட்டாயமாக தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று  (டிச.27)  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் பல்கலைக்கழக முற்றுகை போராட்டமும் சாலை மறியலும் நடைபெற்றது.

பல்கலைக்கழக வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் அதிமுகவினர் ஏராளமானோரை கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்நிலையில்,  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர் விருகை என். ரவி உள்ளிட்ட 900 நபர்கள் மீது கோர்ட்டுபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதி இன்றி கூடுதல், சாலை மறியல் செய்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு.