சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அந்த கட்சியில் உள்கட்சி பூசல் வெடித்தது. அதிமுக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் எம்எல்ஏக்கள் என இரு அணியாக அதிமுக பிரிந்தது. இவர்களில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் மனம் மாறி எடப்பாடி பழனிசாமி கைகோர்த்து விட்டனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி தரப்பினருக்கும் சிவி சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து மோதல் போக்கு ஏற்படும் நிலையில் கடந்த 16 ஆம் தேதி சிவி சண்முகத்தின் ஆதரவாளர்களான 11 பேரின் கட்சி பதவிகளை பறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில் திண்டிவனம் முன்னாள் எம்எல்ஏ அர்ஜுனன் தலைமையில் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் என 1000 த்திற்கும் மேற்பட்ட சிவி சண்முகம் ஆதரவாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக தங்களது ராஜினாமா கடிதத்தை சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்று கொடுக்க திட்டுமிட்டுள்ளனர்.
இதற்காக இன்று காலை சிவி சண்முகம் ஆதரவாளர்கள் 1000 த்திற்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் திரண்டனர். அதனைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்லும் அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளனர். முன்னதாக அவர்கள் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிக்கு நேரில் சென்றும் முறையிட இருக்கிறார்கள். சிவி சண்முகம் ஆதரவாளர்களின் இன்றைய சென்னை பயணம் அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீபத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து வரும் நிலையில் தற்போது சிவி சண்முகத்தின் ஆதரவாளர்களான 1000 மேற்பட்டோர் ராஜினாமா செய்ய உள்ளனர். இது குறித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் அடுத்த மூவ் என்னவாகும் இருக்கும்? எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் வளர்த்த வந்த கட்சியை நிலை சீர்குலைமா?
சிவி சண்முகத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? ராஜினாமாவை நோக்கி பயணம் மேற்கொள்ள திட்டுமிட்டுள்ளார்களா? என்று கேள்வி எழுந்து வருகின்றன.