இந்தியா

ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் ராஜபக்சேவுக்கு நெருக்கடி... இலங்கையில் மீண்டும் பரபரப்பு!

By Sumalekha
28 Jun 2026, 01:00 PM
2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் உளவுத்துறை தலைவர் சுரேஷ் சாலே மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்கள், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் சட்ட நெருக்கடியை உருவாக்கியுள்ளன. இதனால் இலங்கையில் மீண்டும் அரசியல் மற்றும் சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019, ஏப்ரல் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையை விமர்சையாக கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். இலங்கையிலும் கிறிஸ்தவர்கள், ஈஸ்டரையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைக்காக தேவாலயங்களில் திரண்டிருந்தனர். அன்று காலை 830 மணியளவில், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயத்தையே தகர்க்கும் வகையில் முதல் தற்கொலை குண்டு வெடித்தது.

தொடர்ந்து, மட்டக்களப்பு சியோன் தேவாலயம், நீர்க்கொழும்பு புனித செபாஸ்டியான் ஆலயங்களும் தற்கொலைப்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகின. இதில் பலர் உடல் சிதறி பலியானார்கள்.


தொடர்ந்து இதே பாணியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த சங்கரி லா, சின்மன் கிராண்ட், சிங்கபெரி ஆகிய மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டதில் 279 கிறிஸ்தவர்கள் பலியானார்கள். அவர்களில் 45 பேர் வெளிநாட்டவர்கள். 2009ம் ஆண்டு புலிகளுடனான யுத்தத்திற்குப் பிறகு இலங்கையில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் இது என்பதால் நாடு முழுக்க பெரும் பதற்றம் ஏற்பட்டது.

அப்போது அதிபராக இருந்த இலங்கை சுதந்திரா கட்சியைச் சேர்ந்த மைத்ரி சிறிசேனா, 'ஈஸ்டர் குண்டு வெடிப்பிற்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புதான் காரணம். நியூசிலாந்து பள்ளிவாசல் கொலைக்கு பழிவாங்க இதை செய்திருக்கிறார்கள்' என்று சொன்னதோடு தீவிரவாத அமைப்பின் தலைவர்கள் சயூன் மவுலவி உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு ஃபைலை குளோஸ் செய்தார்.

கால ஓட்டத்தில், மக்கள் இந்த வழக்கை மறந்துபோன நிலையில், 2023ல் ஃபிரான்ஸ் செய்தி ஊடகமான சேனல் 4க்கு இலங்கை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவர் பிள்ளையானின் உதவியாளராயிருந்த ஆசாத் மவுலானா கொடுத்த பேட்டிதான் மாஜி உளவுப்பிரிவுத் தலைவர் சுரேஷ் சாலே கைதுக்கு காரணமாகியிருப்பதோடு, மாஜி அதிபர் ராஜபக்சே மீதும் கை வைக்கும் அளவிற்குச் சென்றிருக்கிறது.

இதுகுறித்து கொழும்புவில் உள்ள சர்வதேச பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசினோம். "ஆசாத் மவுலானா அந்த பேட்டியில், 'ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குக் காரணம் மாஜி உளவுப்பிரிவுத் தலைவர் சுரேஷ் சாலேதான் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டார். அமைச்ச ராயிருந்த பிள்ளையானிடம் ஆசாத் மவுலானா, எப்படியாவது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் லிங்க் ஏற்படுத்திக்கொடுங்கள் என்று கூறினார். உடனே பிள்ளையான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சயூன் மவுலவி, சஹாரான் ஆகியோரை சுரேஷ் சாலேவுக்கு அறிமுகப்படுத்தினார். இரு தரப்பும் புத்தளம் கரடி புவல் என்கிற இடத்தில் சந்தித்துப் பேசினர். அப்போதுதான் ஈஸ்டர் குண்டு வெடிப்பு திட்டமிடப்பட்டது. சுரேஷ் சாலே கிரீன் சிக்னல் கொடுத்த பிறகுதான் குண்டு வெடிப்பு நடைபெற்றது.

கொழும்பு தாஜ் சந்த்ரா ஹோட்டலை தாக்க புறப்பட்ட தீவிரவாதி அப்துல் லத்தீப்பை திரும்ப வரவழைத்ததும் சுரேஷ் சாலேதான். குண்டு வெடிப்பு நடைபெற்ற அடுத்த இரண்டு நாட்களில் அதிபர் வேட்பாளராக கோத்தபய அறிவிக்கப்பட்டு வெற்றியும்பெற்றார். அதன் பிறகே சுரேஷ் சாலே உளவுப்பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். அதிபர் கோத்தபயவின் நிழலாக வர்ணிக்கப்படும் சுரேஷ் சாலே, அவர் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிய பிறகுதான் பதவியை ராஜினாமா செய்தார். கொழும்பு தாஜ் சந்த்ரா ஹோட்டலை தாக்க புறப்பட்ட தீவிரவாதி அப்துல் லத்தீப்பை திரும்ப வரவழைத்ததும் சுரேஷ் சாலேதான். குண்டு வெடிப்பு நடைபெற்ற அடுத்த இரண்டு நாட்களில் அதிபர் வேட்பாளராக கோத்தபய அறிவிக்கப்பட்டு வெற்றியும்பெற்றார்.

அதன் பிறகே சுரேஷ் சாலே உளவுப்பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். அதிபர் கோத்தபயவின் நிழலாக வர்ணிக்கப்படும் சுரேஷ் சாலே, அவர் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிய பிறகுதான் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அதிபர் அநுர திசநாயக - ஈஸ்டர் குண்டு வெடிப்பு ஃபைலை தூசு தட்டவே, கடந்த பிப்ரவரி மாதம் கொழும்பு வீதியில் வைத்து சுரேஷ் சாலேவை கைதுசெய்து விசாரணைக்கு அழைத்து சென்றிருக்கிறது போலீஸ். இதனால் அதிர்ந்துபோன ராஜபக்சே குடும்பம், 'சுரேஷ் சாலே ஒரு தேசபக்தர், புலிகளின் தலைவர்களில் ஒருவரான தமிழ்ச்செல்வனைப் போட்டுத் தள்ளியிருக்கிறார்.

மலேசியா சென்று கே.பி. என்கிற குமரன் பத்மநாபனை கைது செய்தவரும் அவர்தான் அப்படிப்பட்டவரை உடனே விடுதலை செய்ய வேண்டும்' எனக்கோரி போராட்டத்தில் இறங்கியது. புத்த பிக்குகளும் கொழும்பில் போராடத் தொடங்கினார்கள். என்றாலும் அநுர அரசு பிடிகொடுக்கவில்வை. எனவே சுரேஷ் சாலே சிறைக்குள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததால் உடல் நலிந்து தற்போது கொழும்பு அரசு மருத்துவமனையில் அட்மிட்டாகியிருக்கிறார்.

சுரேஷ் சாலே திட்டமிட்டு நடத்தியது சுரேஷ் இதற்கிடையே கடந்த ஜூன் 10ம் தேதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலா, நாடாளுமன்றத்தில் பேசுகையில், 'ஈஸ்டர் குண்டு வெடிப்பை சாலேதான். குண்டு வெடிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அவர் இஸ்லாமிய தீவிரவாதிகள் சிலரை சந்தித்துப் பேசியிருக்கிறார். இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று மக்கள் பலியானால், புலிகளை அழித்தொழித்த கோத்தபயவால்தான் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று மக்கள் நினைக்க வேண்டும் என்பதற்காகவே ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றிருக்கிறது' என்று பேசியிருப்பது இலங்கையை மட்டுமல்ல, சர்வதேசங்களையும் அதிர வைத்திருக்கிறது.

இந்த நிலையில், அநுர அரசு சட்டென கோத்தபய ராஜபக்சேவின் வெளிநாட்டு பயணங்களுக்குத் தடை விதித்தது. இதனால், டென்ஷனான கோத்தபய ஈஸ்டர் குண்டு வெடிப்பு வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என்று வக்கீல் சனத் விஜய வர்த்தனே மூலம் கொழும்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அதையும் மீறி அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்பதுதான் இன்றைய நிலை" என சொல்லி முடித்தார்.

கோத்தபய ராஜபக்சேவுக்கு என்ன தண்டனை கிடைக்கப்போகிறது என உலகின் பார்வை இலங்கை மீது விழுந்திருக்கிறது.