Kumudam News 24 X 7 AMP Article
அண்மை

சென்னையில் சூறைக்காற்றுடன் பரவலாக மழை.!

By Jayakumar
09 Jun 2025, 04:18 PM
அம்பத்தூர், ஆவடி, அயப்பாக்கம், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது
மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக வரும் 14ம் தேதி தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.

சென்னையில் பரவலாக மழை

அதேபோல் நாளை (ஜூன்10) மற்றும் நாளை மறுநாள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் அரியலூர் மற்றும் கோவை மலைபகுதியில் மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் 12,13.14 ஆகிய தேதிகளில் நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரை இன்று நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாகன ஓட்டிகள் அவதி

இந்த நிலையில், சென்னையில் இன்று காலையில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, எழும்பூர், வடபழனி, புரசைவாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அதேபோல் அம்பத்தூர், ஆவடி, அயப்பாக்கம், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.