Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

ஓடிடியில் வெளியானது டூரிஸ்ட் ஃபேமிலி

By Jayakumar
03 Jun 2025, 08:07 AM
நடிகர் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குநரான அபிஷன் ஜுவிந் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மே1ம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடியில்...

இலங்கையில் ஏற்பட்ட போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ் குடும்பம் ஒன்று அங்கிருந்து தப்பி தமிழகத்தில் தஞ்சம் அடைகிறது.இங்கு அவர்கள் தங்களின் வாழ்க்கையை துவங்க என்னென்ன சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது என்பதை உணர்வுப்பூர்வமாக, நகைச்சுவை பாணியில் கூறியிருந்தனர்.

இந்த படத்தை நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, நானி மற்றும் இயக்குநர் ராஜமெளலி மற்றும் சீமான் உள்ளிட்டோர் பாராட்டி இருந்தனர்.இந்த நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் நேற்று ( ஜூன்2) ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது.திரையங்குகளில் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ஓடிடியிலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.