Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

வடசென்னை-2ல் சிம்பு? –வெற்றிமாறன் கொடுத்த புதிய அப்டேட்

By Jayakumar
30 Jun 2025, 01:10 PM
நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வீடியோ குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சிலம்பரசன் தனது 49வது படமாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் வடசென்னை கேஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

வடசென்னை2ல் சிம்பு?

மேலும் இந்த படத்தில் வடசென்னையில் நடித்திருந்த நடிகர்கள் சமுத்திரக்கனி, கிஷோர் மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் நடிக்க உள்ளனர்.இதனால் வடசென்னை படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாக இருக்குமோ என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

குறிப்பாக வெற்றி மாறன் – தனுஷ் கூட்டணி உருவான வடசென்னை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வடசென்னை மக்களின் வாழ்வியலை சினிமா வழியாக காட்டியதாக விமர்சனங்களை பெற்றிருந்தது. ஆகையால் இதே கூட்டணி வடசென்னை-2 எப்போது வரும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக தனுஷ் மற்றும் வெற்றி மாறன் பங்கேற்கும் விருது வழங்கும் விழாக்களில் வடசென்னை-2 எப்போது என ரசிகர்கள் கேட்டும் சம்பவங்களும் நடந்துள்ளது.

வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்

இந்த நிலையில், நடிகர் சிம்பு ரவுடி தோற்றத்தில் மாறியுள்ளார். இது சினிமா ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னை எண்ணூரில் துவங்கியது.

இது இப்படத்தின் அறிவிப்பு வீடியோக்கான படப்பிடிப்பு என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோ ஜூலை மாதம் இறுதிக்குள் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. படத்தை அடுத்த ஆண்டு திரைக்கு கொண்டு வர வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிம்புவின் புதிய தோற்றத்தால் வடசென்னை2-ல் தனுஷுக்கு பதில் சிம்பு நடிக்கிறாரா? அல்லது வடசென்னை தொடர்பான கதையில் சிம்பு நடிக்க உள்ளாரா என்பது விரைவில் தெரியவரும். இந்த படத்தின் வீடியோவால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.