ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் வெளியான ‘ராமாயணம்: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. நவம்பர் 5-ம் தேதி வெளியான இப்படம், முதல் வாரத்திலேயே டிக்கெட் விற்பனை, ஐமேக்ஸ் வசூல், நடிகர்களின் கேரியர் ஓப்பனிங் எனப் பல பிரிவுகளில் 22 புதிய சாதனைகளைப் படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டிக்கெட் விற்பனையில் சாதனை!
புக் மை ஷோ தளத்தில் ஒரே நாளில் 16.60 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி, பாலிவுட் படங்களிலேயே புதிய சாதனையைப் படைத்துள்ளது. மேலும், ஒரு மணி நேரத்தில் 1.40 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. தொடர்ந்து நான்கு நாட்கள் 10 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்பனை செய்த ஆறாவது இந்தியப் படமாகவும் உருவெடுத்துள்ளது. முதல் வார இறுதியில் மட்டும் 54.76 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.
உலகளவில் ஐமேக்ஸ் திரையரங்குகளில் சுமார் ரூ.56.25 கோடியும், இந்தியாவில் ரூ.18.75 கோடியும் வசூலித்து புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
வார நாட்களிலும் வசூல் வேட்டை!
ஐந்தாவது நாளில் இந்தியாவில் ரூ.95 கோடி நெட் வசூலைப் பெற்று, இந்திப் படங்களிலேயே அதிக திங்கட்கிழமை வசூல் செய்த படமாக மாறியுள்ளது. ஆறாவது நாளில் ரூ.78.21 கோடியும், ஏழாவது நாளில் ரூ.61.10 கோடியும் வசூலித்து செவ்வாய், புதன்கிழமைகளிலும் புதிய சாதனைகளைப் படைத்துள்ளது.
முதல் ஐந்து நாட்களிலேயே ரூ.300 கோடி நெட் வசூலைக் கடந்ததுடன், முதல் வாரத்தில் இந்திப் பதிப்பு மட்டும் ரூ.409.56 கோடி வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரன்பீர், சாய் பல்லவிக்கு கேரியர் பெஸ்ட்!
இந்தப் படம் ரன்பீர் கபூரின் கேரியரிலேயே அதிக முதல் நாள் வசூலைப் பெற்ற படமாக மாறியுள்ளது. இதற்கு முன்பு ‘அனிமல்’ திரைப்படம் ரூ.63.80 கோடி வசூலித்திருந்த நிலையில், ‘ராமாயணம்’ ரூ.64.85 கோடி வசூலித்துள்ளது.
அதேபோல், சாய் பல்லவியின் முந்தைய சாதனையான ‘அமரன்’ படத்தின் ரூ.21.40 கோடி முதல் நாள் வசூலையும் இப்படம் முறியடித்துள்ளது. இயக்குநர் நிதேஷ் திவாரியின் ‘தங்கல்’ படத்தின் ஓப்பனிங் சாதனையையும் ‘ராமாயணம்’ முந்தியுள்ளது.
ரூ.1,000 கோடி வசூல் கிளப்பில் இடம்!
உலகளவில் எட்டாவது நாளில் ரூ.1,033.55 கோடி வசூலை எட்டியுள்ளதாகத் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ரூ.1,000 கோடி வசூல் கிளப்பில் இணைந்த மூன்றாவது அதிவேக இந்தியப் படமாக உருவெடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் ரூ.500 கோடி நெட் வசூலை ஏழு நாட்களில் கடந்ததாகவும் கூறப்படுகிறது.
யஷ் ராவணனாகவும், ரன்பீர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ள இப்படம், வெளியான முதல் வாரத்திலேயே பல வசூல் சாதனைகளைப் படைத்து இந்தியத் திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.