சினிமா

மீண்டும் இணையும் அருண் மற்றும் லோகேஷ் கூட்டணி…. அடுத்த மூவி அப்டேட் !

By Sumalekha
14 Aug 2026, 09:30 PM
அருண் மாதேஸ்வரன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இணைந்து வெளியான டி.சி திரைப்படம் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திற்கு திட்டுமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி.சி. திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக ஹீரோவாக களமிறங்கி வெளியான முதல் திரைப்படம் என்பதால் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக லோகேஷின் மாஸ் கதாபாத்திரம், வாமிகா கபி மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியின் நடிப்பு, அருண் மாதேஸ்வரனின் இயக்கம் ஆகியவை படத்தின் முக்கிய பலமாக பேசப்பட்டு வருகின்றன.

வசூலைச் சாதனை பொறுத்தவரை, படம் முதல் நாளிலேயே உலகளவில் சுமார் ரூ.5.70 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு நான்கு நாட்களில் சுமார் ரூ.30 கோடி முதல் ரூ.50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து தற்போது வரை சுமார் ரூ.50 கோடி வரை வசூலித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வசூலிலும் படம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆரம்பத்தில் லோகேஷ் ஹீரோவாக நடிப்பது எப்படி இருக்குமோ என சந்தேகப்பட்ட ரசிகர்களுக்கே, படம் தற்போது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் - அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் மீண்டும் ஒரு படத்தை உருவாக்க சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் புதிய படத்திற்காக இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சம்பள விஷயத்தில் இருவரும் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. முதல் படம் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்தால், அடுத்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்போதே உருவாகியுள்ளது.