சினிமா

சிக்கலில் ஜனநாயகன்? – கன்னட அமைப்புகளால் விஜய்க்கு வந்த சோதனை

By Jayakumar
03 Jun 2025, 02:07 PM
தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கவில்லை என்றால் பெங்களூரு நிறுவனம் தயாரித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு தமிழகத்தில் சிக்கல் எழுந்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் ஜூன் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் மே 24ம் தேதி நடந்த தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக பேசினார். இது கன்னட அமைப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள தக் லைஃப் பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்தனர்.

கமல் பேச்சுக்கு எதிர்ப்பு

மேலும் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் 24 மணி நேரம் கெடு விதித்து கர்நாடக திரைப்பட சம்மேளனம் அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் கேரளாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், கன்னடம் தொடர்பான பேசுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் எனவும் அன்பு எப்பொழுதும் மன்னிப்பு கேட்காது என தெரிவித்தார்.
இதனால் இன்னும் கடுப்பான கன்னட அமைப்புகள் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகாது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தக் லைஃப் திரைப்படம் திரையிட பாதுகாப்புக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தக் லைஃப் படம் வெளியாகும் கர்நாடக திரையரங்குகளில் பாதுகாப்பு கோரிய வழக்கு நீதிபதி நாகபிரசன்னா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மன்னிப்பு ஒன்று தான் தீர்வு


அப்போது, "தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? நீங்கள் வரலாற்று ஆய்வாளரா, மொழியியல் வல்லுநரா? மன்னிப்பு கேட்காவிடில் கர்நாடகாவில் படம் ஓட வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்? உங்கள் பேச்சால் அமைதியின்மை ஏற்பட்டு சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.300 கோடி செலவில் படம் எடுக்கப்பட்டதாக கூறும் நீங்கள், கர்நாடகாவில் சில கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என நினைத்தால் மன்னிப்பு கேட்கலாமே? அப்படி கேட்டால் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்திருக்குமே? மன்னிப்பு கேட்காவிடில் கர்நாடகாவில் படம் ஓட வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்?

நீங்கள் வரலாற்று ஆய்வாளரா, மொழியியல் வல்லுநரா? கன்னடம் தமிழில் இருந்து வந்ததற்கான ஆதாரம் உள்ளதா நானே இந்த படத்தை பார்க்கலாம் என நினைத்தேன்; ஆனால் இந்த விவகாரத்தில் பார்க்க முடியாது.கமல்ஹாசன் ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும். பேசிய கருத்தை திரும்பப் பெற முடியாது. மன்னிப்பு ஒன்றுதான் தீர்வு என நீதிபதி தெரிவித்தார்.பின்னர் வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.

எனக்கு மனவேதனையாக இருக்கிறது

இந்த நிலையில், கன்னட மொழி குறித்தான பேச்சுக்கு கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், “நடிகர் ராஜ்குமார் குடும்பம், குறிப்பாக சிவராஜ் குமார் மீதான அன்பின் வெளிப்பாடாகவே நான் சில கருத்துக்களை பேசினேன். அது முற்றிலுமாக தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது.நாம் அனைவரும் ஒரே குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்றே பேச நினைத்தேன். ஆனால் கன்னடத்தை பிரிக்க நினைக்கவில்லை. கன்னட மொழியின் பாரம்பரியம் குறித்து எந்த மாற்று கருத்தும் இல்லை.

“எனக்கும் சிவாண்ணாவுக்கும் இடையேயான மதிப்பும், அன்பும் எப்போதும் குறையாது, இன்னும் வலுபெறும். என் மீதுள்ள அன்பினால் மட்டுமே நடிகர் சிவராஜ் குமார், தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.ஆனால் இந்த சர்ச்சையால் அவர் சந்திக்கும் நெருக்கடிகள் எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

கமல்ஹாசன் பேச்சுக்கு ஆதரவு

தமிழ், கன்னடா, தெலுங்கு, மலையாளம் என இந்த நிலத்தின் அனைத்து மொழிகளும் என் மனதுக்கு நெருக்காமனவையே. கன்னடர்கள் தங்கள் தாய்மொழி மீது வைத்துள்ள அன்பு மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது நான் சினிமா மொழியை பேசுபவன். இம்மொழிக்கு அன்பும் உறவும் மட்டுமே தெரியும். என்னுடைய கருத்தும் நமக்கிடையேயான அன்பையும் உறவையும் பலப்படுத்தவே சொல்லப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

தக் லைஃப் படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கவில்லை என்றால் தமிழகத்தில் ஜனநாயகன் ஓடாது என கமல்ஹாசனுக்கு ஆதரவாக பலரும் கருத்து வருகின்றனர்.
கமல்ஹாசனின் கருத்துக்கு ஒட்டுமொத்த தமிழகமும் சாதி, மத, கட்சி பேதமின்றி ஆதரவாக உள்ளதாகவும், தக் லைஃப் படத்தை அங்கு தடை செய்தால், தமிழ்நாட்டில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தை திரையிடக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜனநாயகனுக்கு சிக்கல்?

ஜனநாயகன் படத்தை பெங்களூருவை சேர்ந்த KVN புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதால் அதற்கு தடை விதிப்போம் என எக்ஸ் பக்கத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதனால் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகனுக்கு பெரும் சிக்கல் எழுந்துள்ளது.