சினிமா

துபாய் ஓட்டலில் உல்லாசமாக இருக்க ஆசை....ஸ்ரீலீலாவின் கனவு இதுவா?

By Christon
02 Aug 2026, 08:00 PM
நடிகை ஸ்ரீலீலாவின் துபாய் ஆடம்பர விடுதியில் தங்க வேண்டும் என்ற கனவு மற்றும் அவரது வாழ்க்கை ஆசைகள் பற்றிய சுவாரஸ்ய பதிவு.
தன் கீழ் உதட்டழகால் ரசிகர்களைக் கிறங்கடிக் கும் செங்கமலக் கண்ணழகி ஸ்ரீலீலாவின் பரந்த மனதுக்குள், இதயத்தின் இடது புறம் சின்னதாக ஓர் ஆசை...
வாழ்க்கையில் ஒரு நாளாவது துபாயில் இருக்கும் உலகின் விலை உயர்ந்த ஆடம்பர நட்சத்திர விடுதியான 'ராயல் மேன்ஷனில் உல்லாசமாக ஓர் இரவு தங்க வேண்டும் என்பதுதான் அது. பல மாதங்களாக இந்த ஆசை மூச்சுவிடும் போதெல்லாம் இதயத்தை இறுக்கிப் பிடிக்கிறதாம். சரி; அப்படி என்ன அந்த விடுதியில் இருக்கிறது..?

இரண்டு தளங்கள் கொண்ட அந்த விடுதி அறையில் நான்கு அறைகள் இருக்குமாம். அந்த அறைக்கென்றே தனியாக இருக்கும் 'இன்ஃபினிட்டி' நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டே துபாய் நகரையும் அரபிக் கடலையும் பார்த்து ரசிக்கும் அனுபவம் அதி அற்புதமாக இருக்குமாம்.

உலகின் மிகச் சிறந்த உணவில் இருந்து உயர்தரமான மது மற்றும் மனதை வருடும் சேவை வரை அனைத்தையும் ஓர் இரவு அனுபவிக்கக் கட்டணம் இந்திய மதிப்பில் ரூபாய் 85 லட்சமாம்... மேலும் சில சிறப்பு சேவைகளை விரும்பினால் ஒரு நாள் கட்டணம் ஒரு கோடியைத் தாண்டிவிடுமாம்.

ஸ்ரீலீலாவின் சின்ன இதயத்திற்குள் இவ்வளவு பெரிய ஆசையா என்று கண்களை விரிக்காதீர் கள்... அவருக்கு இதைவிட பெரிய பெரிய கனவுகள் எல்லாம் இருக்கிறதாம்... தமிழ் ரசிகர்கள் மனது வைத்தால் அத்தனையும் நிறைவேறும் என்று கீழ் உதட்டைப் பல்லால் கடித்து, பாதிக் கண்களை மூடி அவர் பார்க்கும் பார்வை இருக்கிறதே... அதுவே ஒரு புகைப்படக் கவிதை..!

chase the dream eat the berry