சினிமா

பிரபல இயக்குநர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு.. திரையுலகில் பரபரப்பு!

By Christon
25 Mar 2026, 12:30 PM
கும்பமேளா மூலம் புகழ்பெற்ற நடிகை மோனாலிசா, பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மீது அடுக்கியுள்ள பாலியல் புகார்கள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பமேளா மூலம் புகழ்பெற்ற நடிகை மோனாலிசா, பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மீது அடுக்கியுள்ள பாலியல் புகார்கள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் அத்துமீறல்

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளாவின் போது பிரபலமடைந்த நடிகை மோனாலிசா, சமீபத்தில் நடிகர் பர்மான் கானைக் காதல் திருமணம் செய்துகொண்டு தற்போது கொச்சியில் வசித்து வருகிறார். இந்நிலையில், செய்தி நிறுவனங்களுக்குப் பேட்டியளித்த அவர், இந்தித் திரைப்பட இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தன்னிடம் பலமுறை தவறாக நடக்க முயன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார். டேராடூன் மற்றும் நேபாளத்தில் நடைபெற்ற படப்பிடிப்புகளின் போது, தனது பெண்மையை அவமதிக்கும் வகையில் உடல் ரீதியான அத்துமீறல்களில் இயக்குநர் ஈடுபட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினரின் அலட்சியம்

தனக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்னரே இந்தச் சம்பவங்கள் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ள மோனாலிசா, இது குறித்து அப்போதே தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். ஆனால், அவரது குடும்பத்தினர் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததால், "இது உனது முதல் படம் தானே" என்று கூறி புகாரைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

சட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை

தற்போது உண்மைகளை மறைப்பதற்காக இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தனக்கு எதிராகத் தேவையற்ற கருத்துகளைப் பரப்பி வருவதாகக் கூறியுள்ள மோனாலிசா, அவர் மீது முறைப்படி காவல் நிலையத்தில் புகார் அளிப்பது குறித்துத் தனது கணவருடன் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.