உலகம்

ரத்த சொந்தங்கள் கைவிட்டாலும்... கைகொடுத்த அந்நியர்கள்! நெகிழ்ச்சி சம்பவம்!

By Sumalekha
02 Nov 2026, 06:05 PM
கல்யாணத்துக்கு சொந்தக்காரங்க வரமாட்டாங்களேன்னு பயந்த இளைஞர்... அப்புறம் நடந்ததைப் பாருங்க!

கல்யாணம்னா என்ன? சொந்தக்காரங்க, நண்பர்கள், தெரிஞ்சவங்கன்னு ஒரு கூட்டமே வந்து வாழ்த்தணும்... வீடே களைகட்டணும்... இதுதானே எல்லாரோட ஆசையும்..

ஆனா, சீனாவைச் சேர்ந்த 24 வயசு இளைஞர் சியாவோ சியாவ் சூவுக்கு, தன்னோட கல்யாணத்துக்கு யார் வருவாங்கன்னு நினைச்சாலே ஒரு பயம். ஏன்னா, இவருக்கு மூணு வயசு இருக்கும்போதே அப்பா இறந்துட்டாரு. அதுக்கப்புறம் அம்மாவும் மறுமணம் பண்ணிக்கிட்டாங்க. அதனால, இவரும் இவரோட அண்ணனும்தான் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா வளர்ந்திருக்காங்க.

கல்யாணத்துக்காக கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து வச்சிருந்தாலும், கல்யாணத்துக்கு உறவினர்கள் யாராவது வருவாங்களா என்பது அவருக்குத் தெரியல. அதான் ஒரு வித்தியாசமான முடிவு எடுத்திருக்காரு.

அதாவது, ”என் கல்யாணத்துக்கு நீங்களும் வாங்க!” அப்படின்னு சோஷியல் மீடியாவுல நெட்டிசன்ஸ்கள Invite பண்ணிருக்காரு.

அவ்வளவுதான்... அந்த அழைப்பைப் பார்த்துட்டு ஒவ்வொருத்தரா சூவுவோட கல்யாணத்துக்கு வர ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா, சும்மா கல்யாணத்துக்கு வந்து சாப்பிட்டுட்டு மட்டும் போகல. சில பேர் சமையல் செய்ய… சில பேர் கல்யாணத்துக்குத் தேவையான பொருட்களக் கொண்டு வர.. இன்னும் சில பேர் வீட்டையே அலங்கரிக்க… திருமணத்துக்கான இனிப்புகளையும் கொண்டு வந்து கொடுத்திருக்காங்க.

அதுமட்டுமில்லாம, மணமக்களை அழைத்துச் செல்ல கார்களையும் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. இத பாக்க, அப்படியே தளபதியோட பாட்டு தான் நியாபகத்துக்கு வருது.. உன்னை யாரோ பெத்திருக்க, என்னை யாரோ பெத்திருக்க, ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா…

அதாவது... நேத்து வரைக்கும் யாருன்னே தெரியாதவங்க, ஒரே நாள்ல இவரோட கல்யாணத்துல சொந்தக்காரங்களா மாறிட்டாங்க.. அந்தச் சின்ன கிராமமே அந்த நாள்ல ஒரு திருவிழா மாதிரி மாறிடுச்சு. இதைப் பார்த்த நெட்டிசன்களும் செம எமோஷனல்.

“இதைப் பார்த்து நான் ஏன் அழறேன்னே தெரியல... மனிதர்களோட இந்தப் பக்கத்தைப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு” அப்படின்னு ஒருவர் கமெண்ட் பண்ணியிருக்காங்க.

இன்னொருத்தரோ,“சோஷியல் மீடியா எதுக்காக உருவாக்கப்பட்டது என்பதற்கு இதுதான் உதாரணம்” அப்படின்னு சொல்லியிருக்காங்க.

இன்னொருவர்,“அவங்க ஒரு கல்யாணத்தையே திருவிழாவா மாத்திட்டாங்க. இந்த நாளை அந்த இளைஞர் வாழ்நாள் முழுக்க மறக்கவே மாட்டாரு”ன்னு நெகிழ்ந்திருக்காங்க.

உறவுன்னா ரத்த சம்பந்தம் மட்டும்தானா? சில நேரம்... நேத்து வரை நமக்கு யாருன்னே தெரியாதவங்ககூட, ஒரு நாள் நமக்காக வந்து நின்னுடுவாங்க..

இந்த இளைஞரோட கல்யாணம்... அதுக்கு ஒரு அழகான உதாரணம்..