தமிழகத்தில் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை சின்னமலை IDG சாலையில் உள்ள OPG Power & Infrastructure பிரைவேட் லிமிடெட் என்ற சோலார் பேனல் தயாரிக்கும் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.