Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.3.61 லட்சம் மோசடி.. 2 பேர் கைது!

By VASUKI
03 Jun 2025, 03:08 PM
ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி ரூ. 3.61 லட்சம் பெண்ணிடம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் நாகநந்தினி என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 20.09.2024 அன்று நாகநந்தினி வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆன்லைன் மூலம் Google reviews பகுதி நேர வேலை வழங்குவதாக வந்த குறுஞ்செய்தியை நம்பி பல தவணைகளாக ரூ.3,61,450 பணத்தை வங்கி கணக்கில் நாகநந்தினி செலுத்தியுள்ளார்.

ஆரம்பத்தில் சிறிய தொகைகளை நாகநந்தினிக்கு சம்பளமாக அவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தி வந்துள்ளனர். நாளைடைவில் எதிரிகள் நாகநந்தினிக்கு பணம் அனுப்பாமல் இருந்ததால், நாகநந்தினி அவர்களை தொடர்பு கொண்ட போது, அவர்கள் நாகநந்தினியின் அழைப்பை துண்டித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட நாகநந்தினி மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேற்கு மண்டலம் சைபர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம், சரவணன் ஆகிய இருவரை கைது செய்தனர். வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற தலைமறைவு குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட மேற்படி எதிரிகள் இருவரும் விசாணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.