தமிழ்நாடு

தமிழகத்தில் தேர்தல் ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு!

By Christon
11 Apr 2026, 04:10 PM
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பணப்பட்டுவாடா மற்றும் இலவச அறிவிப்புகளைக் காரணம் காட்டித் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பணப்பட்டுவாடா மற்றும் இலவச அறிவிப்புகளைக் காரணம் காட்டித் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே, மதுரையைச் சேர்ந்தகே.கே. ரமேஷ் என்பவர், உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுவதாகவும், வாக்காளர்களுக்குப் பணமும் இலவசங்களும் வாரி வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மனுவில் உள்ள முக்கியக் கோரிக்கைகள்

மேலும், "தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் வாக்காளர்களுக்குப் பல்வேறு இலவசங்களை அறிவித்து வருகின்றன. இது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானது மட்டுமல்லாமல், தேர்தல் ஆணையத்தின் நன்னடத்தை விதிகளையும் மீறுவதாக உள்ளது. எனவே, இந்த மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழகச் சட்டமன்றத் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த மனு வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 13) உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காகப் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.