தமிழ்நாடு

வார இறுதியில் ஷாக்: தங்கம் விலையில் மீண்டும் உயர்வு!

By Christon
20 Jun 2026, 10:13 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடிச் சரிவைச் சந்தித்திருந்த நிலையில், இன்று (ஜூன் 20) சனிக்கிழமை காலை வர்த்தகத்தில் விலை சற்றே உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,040 என்ற வரலாற்றுச் சரிவைக் கண்டு ரூ. 1,08,560-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று காலையில் தங்கம் விலை மீண்டும் சற்றே ஏறுமுகத்தைக் கண்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து, சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ. 1,08,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு இன்று ரூ. 30 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. 380 குறைந்து ரூ. 13,570-க்கு விற்பனையாகி வந்த நிலையில், இன்றைய விலை உயர்வின் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ. 13,600 ஆக மாறியுள்ளது.

தங்கம் விலை சற்றே உயர்ந்திருந்தாலும், வெள்ளியின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ. 255-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலையும் நேற்று குறைந்த அதே விலையான ரூ. 2.55 லட்சத்திலேயே இன்றும் நீடிக்கிறது.