தமிழ்நாடு

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 5000 கன அடி நீர் திறப்பு.. பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

By VASUKI
12 Dec 2024, 05:26 PM
பூண்டி நீர்த்தேக்கத்தில் தொடர்மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திலிருந்து 5000 கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுவதால், மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பூண்டி நீர்த்தேக்கத்தில் தொடர்மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திலிருந்து 1000 கன அடியாக திறந்து விடப்பட உபரி நீர் 5000 கன அடியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட உள்ளதால்  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ளார்.

சென்னை மக்களின் குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் பூண்டியில் 34,58 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். 1மணி மணி நிலவரப்படி  கொள்ளளவு 2900மில்லியன் கன அடியாகவும் உள்ளது. சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் பூண்டியில் நீர் வரத்து 3500 கன அடியாக உள்ளது. தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும் நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதாலும் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

அணைக்கு வரும் நீர் வரத்து 35 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகதால் அணையின் வெள்ளதீர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று 1.15 மணிக்கு  விநாடிக்கு 1000 கன அடி திறக்கப்பட்ட நிலையில் நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளதால் நீர் தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

இதனால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. எனவே நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம். கிருஷ்ணாபுரம் ஆட்ரம்பாக்கம். ஒதப்யை நெய்வேலி,  எறையூர் பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர் வெள்ளியூர் , தாமரைப்பாக்கம் திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவலூர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அதவன்பாளையம், மடியூர், சீமாவரம் ,வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.