Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

By VASUKI
29 Aug 2025, 07:03 PM
விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம், 31.08.2025 அன்று நடைபெறவுள்ள நிலையில், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், வரும் 31.08.2025 அன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு,  சென்னையில் உள்ள பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான விநாயகர் சிலைகள் பக்தர்களால் கடற்கரைப் பகுதியில் உள்ள தீர்மானிக்கப்பட்ட இடங்களுக்குக் கொண்டு வரப்பட உள்ளன.

சிலை ஊர்வலம் நடைபெறும் இடங்கள்:

ஶ்ரீனிவாசபுரம் - மயிலாப்பூர்
பல்கலை நகர் – திருவான்மியூர்
N 4 மீன்பிடி துறைமுகம் – புது வண்ணாரப்பேட்டை
பாப்புலர் எடை மேடை – திருவெற்றியூர்

போக்குவரத்து மாற்றங்கள்:

திருவல்லிக்கேணியிலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலை: காந்தி சிலை, ஆர்.கே. சாலை சந்திப்பிலிருந்து வி.எம். தெரு, லஸ் ஜங்சன், அமிர்தாஞ்சன் சந்திப்பு, டிசில்வா சாலை, வாரன் சாலை, டாக்டர். ரங்கா சாலை, பீமண்ண கார்டன் சந்திப்பு, சி.பி. ராமசாமி சாலை, செயிண்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு, ஸ்ரீனிவாசா அவென்யூ, ஆர்.கே. மடம் சாலை வழியாகச் செல்லலாம்.

அடையாறிலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலை: ஆர்.கே. மடம் சாலை, திருவேங்கடம் தெரு, வி.கே. ஐயர் சாலை சந்திப்பு, தேவநாதன் தெரு, செயிண்ட் மேரிஸ் சாலை, ஆர்.கே. மடம் சாலை, தெற்கு மாட சந்திப்பு, வெங்கடேச அக்ரஹாரம் சாலை, கிழக்கு அபிராமபுரம், லஸ் அவென்யூ, பி.எஸ். சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர் ஆர்.கே. சாலை வழியாகச் செல்லலாம்.

ரத்னா கஃபே சந்திப்பு: சிலை ஊர்வலம் கடக்கும்போது, ஜாம் பஜார் காவல் நிலையத்திலிருந்து ரத்னா கஃபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ஜானி ஜான்கான் ரோடு வழியாகத் திருப்பி விடப்படும்.

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை: சிலை ஊர்வலம் கடக்கும்போது, ஐஸ் ஹவுஸ் சந்திப்பிலிருந்து ரத்னா கஃபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் ரோடு - காமராஜர் சாலை வழியாக அல்லது GRH சந்திப்பை நோக்கித் திருப்பி விடப்படும்.

லூப் சாலை: கலங்கரை விளக்கத்திலிருந்து ஸ்ரீனிவாசபுரம் சிலை கரைக்கும் இடத்திற்கு, சிலை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.

பொதுவான அறிவுறுத்தல்கள்:

சிலை கரைக்கும் இடங்களைச் சுற்றி 10 கி.மீ. சுற்றளவிற்கு எந்தவிதமான வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.

வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.