Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

என் அப்பாவின் கடைசி ஆசை இது.. எவரெஸ்டில் ஏறிய சிறுவன் ஆசிஷ் உருக்கம்..!

By VASUKI
30 May 2025, 09:39 PM
என் அப்பாவின் கடைசி ஆசை நிறைவேற்றுவதற்காக எவரெஸ்டில் ஏறிய சிறுவன் ஆசிஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச எவரெஸ்ட் தினம் (மே -29) (International Everest Day), உலகின் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட்டை முதன்முறையாக வென்ற சர் எட்மண்ட் ஹிலரி மற்றும் தென்சிங் நார்கே (1953) ஆகியோரின் சாதனைக்கு நினைவுகூரும் நாளாக ஒவ்வொரு வருடமும் நினைவு கூறப்படுகிறது. இந்த சிறப்பான நாளில், சென்னையை சேர்ந்து 18 வயது சிறுவன் ஆசிஷ் யு தனது குழுவுடன் எவரெஸ்டில் ஏறி புதிய சாதனையை படைத்துள்ளார்.

ஆசிஷ் யு (வயது: 18) – சென்னைச் சிறுவன், இவரது தந்தை திரு. யு. வெங்கட சுப்பையாவின் இறுதி ஆசையை நிறைவேற்றும் நோக்கத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்துள்ளார். பள்ளி கல்வியை முடித்ததும் (2024-இல் பன்னிரண்டாம் வகுப்பு), ஒரு வருட இடைவெளியில் அவருடைய பயிற்சி துவங்கியது (டிசம்பர் 2023). அனுபவப் பயணம், அடிப்படை மற்றும் மேம்பட்ட மலை ஏறுதல் பயிற்சிகளை A தரத்தில் முடித்துள்ளார். இதன் பின்னர், ஹிமாலயன் பகுதியில் பல சவாலான நடைபயணங்களையும் மேற்கொண்டார்.

உலகின் மிகவும் இளம் எவரெஸ்ட் அணித் தலைவராக ஆசிஷ் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 5 பேர் கொண்ட குழுவில், 3 பேர் மட்டுமே சிகரத்தை வென்றனர், ஆனால் ஒரு உறவினர் லொட்ஸே சிகரத்தில் இறந்தார்.

• எவரெஸ்ட் சிகரம் ஏற்றும் பயணம் 11 மே அன்று துவங்கி 15 மே அன்று வெற்றி கண்டது.
• மொத்த பயண காலம்: 37 நாட்கள் (5 ஏப்ரல் – 15 மே).
• சுழற்சி பயணம்: 30 ஏப்ரல் – 3 மே.

எவரெஸ்டில் ஏறுவதற்க்கு ரூ. 38 லட்சம் செலவானது. இதில், 30 லட்சம் ரூபாயை வேலம்மாள் வித்யாலயா பள்ளியும், மற்றும் உதயநிதி ஸ்டாலின் 5 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளனர்.

சர்வதேச எவரெஸ்ட் தினமான (மே 29), ஆசிஷ் தனது வெற்றிப் பயணத்துடன் சென்னைக்கு திரும்பியிருக்கிறார். அவரது சாதனை இளைஞர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த, மேலும் சிகரம் வெல்லும் கனவுகள் எப்போதும் சாத்தியமானது.

இது போன்ற பல சாதனைகளுக்கு உதவியாக இருக்கும் வேலம்மாள் குழுமத்தின் உரிமையாளர் வேல் மோகன் அவர்கள் பல மாணவர்களின் திறமையை கண்டறிந்து அவர்களின் லட்சியத்தை அடைய வழிகாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.