Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ரூ.12,000-ஐ கடந்த ஒரு கிராம் தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

By Christon
01 Dec 2025, 10:34 AM
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும், கடந்த சில நாட்களாக மீண்டும் உச்சத்தை நோக்கிப் பயணித்து வருகிறது. இந்த நிலையில், இன்று (டிசம்பர் 1) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, சவரன் ரூ.96,560-க்கு விற்பனையாகிறது.

தொடரும் விலை ஏற்ற இறக்கமும்

கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.97,600 என்ற உச்சத்தை எட்டிய நிலையில், அதே மாதம் 28-ம் தேதி ரூ.88,600 என்ற நிலைக்கு விலை சரிந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கிப் பயணித்து வருகிறது. நேற்று முன்தினம் (நவம்பர் 29) தங்கம் விலை கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.95,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம்

இந்த நிலையில், இன்று (டிசம்பர் 1) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக மேலும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.96,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.196-க்கும், ஒரு கிலோ ரூ.1,96,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.