தமிழ்நாடு

நீ அழகாய் இருக்கிறாய் எனக் கூறி பெண்ணை தாக்கிய நண்பர்...இளைஞரை நையப்புடைத்த பொதுமக்கள்

By Jayakumar
22 Apr 2025, 07:28 PM
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தோழி மீது சரமாரி தாக்குதல்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவரது பெண் தோழியுடன் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வேறு பகுதிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது பிரவீன்குமாருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாகவும் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

பிரவீன் குமார் பேருந்து நிலையத்தில் வைத்து தனது தோழியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் பிரவீன் குமாரை பிடித்து தர்ம அடி கொடுத்து அப்பெண்ணை மீட்டனர். பின்னர் தகவலின் பேரில் ராசிபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில் பிரவீன் குமாரை காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளைஞர் கைது

இதுகுறித்து தாக்குதலுக்கு உள்ளான புவனேஸ்வரி கூறுகையில்,“ கணவரை பிரிந்து தற்போது வாழ்ந்து வருவதாகவும், பிரவீன் குமாருக்கும் இளம்பெண்ணும் கடந்த சில மாதங்களாக நட்பாக பழகி வருவதாகவும் ,தன்னை திருமணம் செய்வதாக பிரவீன் குமார் கூறியதாக கூறப்படுகிறது. அப்போது பிரவீன் குமார் நீ அழகாக இருப்பதாக கூறி அணிந்திருந்த தோடு, கொலுசு , மூக்குத்தி உள்ளிட்ட நகைகளை கழட்டித் தருமாறு புவனேஸ்வரிடம் கேட்டுள்ளார். இதனால் ஒருவருக்கொருவர் வாய் தகராறு ஏற்படவே , ஆண் நண்பர் பெண்ணை பேருந்து நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்கி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.