Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அடுத்த நான்கு நாட்களுக்கு உஷாரா இருங்க மக்களே.. வானிலை அப்டேட்

By nagalekshmi
25 Mar 2025, 01:34 PM
தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்ப நிலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் பல இடங்களில் அதிகப்படியான வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் வெப்பநிலை இயல்பை ஒட்டியும் ஓரிரு இடங்களில் இயல்பை  விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாவும் உள்ளது. 

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35–38 டிகிரி செல்சியஸும், தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32–36 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.  

தொடர்ந்து, வரும் 28-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

நாளை (மார்ச் 26)  தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய  மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 

வரும் 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக  2-3 டிகிரி செல்சியஸ்  உயரக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச  வெப்ப அளவின் வேறுபாடு 

வரும் 29-ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச  வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பை  விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு

நாளை (மார்ச் 26) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை  35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.