Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

வெளுத்து வாங்க போகும் வெயில்.. வானிலை மையம் லேட்டஸ் அப்டேட்

By nagalekshmi
26 Mar 2025, 01:39 PM
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை  விட   2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை (மார்ச் 27)  மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மார்ச் 28: மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மார்ச் 29-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

நாளை (மார்ச் 27)  தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய  மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 

வரும் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக  2-3 டிகிரி செல்சியஸ்  உயரக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச  வெப்ப அளவின் வேறுபாடு 

இன்று (மார்ச் 26) முதல் வரும் 30-ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச  வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை  விட   2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

வரும் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கக்கூடும் என்பதால்  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

நாளை (மார்ச் 28) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை  34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.