தமிழ்நாடு

இடைத்தேர்தலுக்கு பின் ஷூட்டிங்.. ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த முதலமைச்சர் விஜய்!

By Christon
05 Nov 2026, 08:27 PM
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாவதாகக் கூறப்படும் பெரிய பட்ஜெட் அரசு விளம்பரப் படத்தில் முதலமைச்சர் விஜய் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரைப்படங்களிலிருந்து விலகி தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அரசு விளம்பரப் படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி இணையத்திலும் அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.

இயக்குநராகக் கௌதம் மேனன்

அரசின் நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், பெரிய பட்ஜெட்டில் விளம்பரப் படம் ஒன்று தயாரிக்கப்படவுள்ளதாகவும், அதை பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 நாட்கள் கால்ஷீட்

சினிமாவில் இருந்து முற்றிலும் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், மீண்டும் திரையில் முதலமைச்சரைப் பார்க்க முடியுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ள தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்த செய்தி உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த விளம்பரப் படப்பிடிப்பிற்காக முதலமைச்சர் விஜய் 2 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இடைத்தேர்தலுக்குப் பின் படப்பிடிப்பு

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் பணிகள் நிறைவடைந்த பின்னரே இந்த விளம்பரப் படத்திற்கான படப்பிடிப்புத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான அரசு விளம்பரங்களை விட அதிக பொருட்செலவில் உருவாகவுள்ள இத்திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம்.