Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ரூ. 250 கோடி செட்டில்மென்ட்? குடும்பப் பிரச்சினையைத் தீர்க்க விஜய் எடுக்கும் அதிரடி முடிவு!

By Christon
03 Mar 2026, 04:28 PM
மனைவி சங்கீதா விவாகரத்து கோரி இருந்த மனுவை திரும்ப பெற நடிகர் விஜய் பேசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களாகத் தமிழக அரசியலிலும், சினிமா வட்டாரத்திலும் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஒரு புதிய திருப்பமாக இருவருக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

விவாகரத்து மனுவைத் திரும்பப் பெற முயற்சி?

விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை, தற்போது திரும்பப் பெறச் செய்வதற்கான முயற்சிகளில் விஜய் தரப்பு ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காகச் சங்கீதாவுடன் விஜய் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ. 250 கோடி ஜீவனாம்சமா?

சங்கீதா மற்றும் அவர்களது மகன், மகளின் எதிர்காலப் பாதுகாப்பிற்காகச் சுமார் ரூ. 250 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அல்லது நிதியை வழங்க விஜய் சம்மதித்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் இரு தரப்பிலிருந்தும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது ஒரு நிரந்தரத் தீர்வாக இருக்குமா அல்லது தற்காலிகச் சமரசமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

தேர்தல் நெருங்குவதால் எடுத்த முடிவா?

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் இத்தகைய சிக்கல்கள் அவரது அரசியல் பிம்பத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என அவரது ஆலோசகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சூழல் இருப்பதால், அதற்கு முன்பே இந்தப் பிரச்சினையைச் சுமூகமாக முடித்துவிட்டுத் தேர்தல் களத்தில் முழுமையாகக் கவனம் செலுத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.