Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அரை நிர்வாண கோலத்தில் கோயிலுக்குள் கொள்ளை- காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சி

By Jayakumar
14 Aug 2025, 08:26 AM
கோயிலுக்குள் கொள்ளையடித்த திருடர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சிகள்
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ளது ஆதிகுடிகாடு கிராமம். இங்குச் செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றுவட்டார கிராம மக்கள் இந்தச் செல்லியம்மனை வழிபட்டு வருகின்றனர்.

கோயிலில் கொள்ளை

இந்நிலையில் இன்று அதிகாலை கோயில் இரும்புக் கதவுகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த இரண்டு திருடர்கள், கோயில் உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

அரை நிர்வாண கோலத்தில் மேலாடையின்றி கோயிலுக்குள் நுழைந்த திருடர்கள் தாங்கள் அணிந்து வந்த, உள் பனியனை கழட்டி முகத்தை மறைத்துக்கொண்டு சிசிடிவியில் தங்களை அடையாளம் தெரியாத வண்ணம், பூட்டை உடைத்து கோயிலுக்குள் நுழையும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

போலீசார் விசாரணை

இன்று காலை வழக்கம்போலக் கோயிலைத் திறந்த பூசாரி கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செந்துறை காவல்துறையினர் திருட்டு சம்பவம்குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.