Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கொரோனாவினால் தமிழகத்தில் உயிரிழப்பு இல்லை - அமைச்சர் சுப்ரமணியன் விளக்கம்

By VASUKI
04 Jun 2025, 12:02 PM
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், இணை நோய் பாதிப்பு இருப்பதாலே உயிரிழப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சீர்மிகு சிறுநீரக மருந்து திட்டத்தில் மக்கள் பயன் பெற நகரத்திலும் டயாலிசஸ் செய்யும் வசதியை கொண்டு செல்ல இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்துவர்களுக்கான பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். இதில் நீடித்த நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் கொழுப்பு மிகு கல்லீரல் நோய் விழிப்புணர்வும், இதற்கான பயிற்சி முகாம் நடத்துவதில் முக்கியமானது என அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பாதிப்பு பதற்றம் வேண்டாம் என்றும், தற்போது வரை 236 பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது என்றார். இதிலும் வயது மூத்தவர்கள், இணை நோய் பாதிப்பு இருப்பவர்கள் தான் பாதிப்பு அதிகம் எனக் கூறினார். மேலும் மாவட்ட சுகாதார அலுவலர்கள் கண்காணிப்பு செய்ய அறிவுறுத்தி இருப்பதாக கூறினார்.

அதேபோல், மத்திய அரசு அறிவுறுத்தல் அடிப்படையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் பொது இடத்தில் கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும் எனவும், பொது இடத்தில் முக கவசம் அவசியம் அணிய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அதேபோல் கொரோனா இறப்பு எவ்வளவு என்பதை சொல்ல முடியாது எனவும், இணை நோய் பாதிப்பால் உயிரிழப்பு நடக்கிறது எனவும் தெரிவித்தார்.

கொரோனா இன்னும் வீரியமிக்கதாக உருமாறவில்லை என்றும், பாதிப்புகள் இருந்தால் உடனடியாக
அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதாக கூறினார்.

மேலும் சீர்மிகு சிறுநீரக பாதிப்பு திட்டத்தில் மக்கள் கூடுதலாக பயன் பெற, நகர பகுதியில் கூட டயாலிசஸ் கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளோம். சிறுநீரக பாதிப்பு இல்லாமல் இருக்க கூடுதல் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தார்.

எல்லா திட்டங்களிலும் மாறுபட்டு மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய திட்டமாக இருக்கும் எனவும், அரசு மற்றும் தனியார் துறையில் ஒருங்கிணைக்கப்பட உள்ளது என்றும் கூறினார்.

பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் சிகிச்சை, மக்ப்பேறு மருத்துவம் குழந்தை மருத்துவம், இருதயவியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் இந்திய முறை மருத்துவம் என அனைத்தும் அவரவர் இடங்களுக்கு சென்று மருத்துவம் அளிக்க உள்ளதாகவும் கூறினார்.

மாஸ்டர் செக்கப் என்று சொல்லக்கூடிய முழு உடல் பரிசோதனைக்கு மருத்துவமனையில் பயன்கள் இருந்து 4,000 வரை நமது அரசு மருத்துவமனையில் கூட செலவாகிறது. இதில் தனியார் மருத்துவமனையில் பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால், ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் முழு உடல் பரிசோதனை என்கிற பெயர்களில் வசிக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டம் செயல்படுத்தப்படுவதாக பெருமிதம் தெரிவித்தார்.

388 வட்டாரங்களில் தலா 3 முகாம் என மொத்தம் 1164 முகாம்கள் நடைபெற உள்ளது. சென்னையில் 15 மண்டலத்திற்கு ஒன்று என 15 முகாம்கள், ஒவ்வொரு மாநகராட்சிக்கும் நான்கு முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறவேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.