Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

புதிதாக 1.54 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டை -  உணவுப்பொருள் வழங்கல் துறை

By VASUKI
07 Dec 2024, 02:43 PM
புதிதாக சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நபர்களுக்கு புதிய ரேஷன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது என   உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

புதிதாக சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு புதிய ரேஷன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது என 
 உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி அரசு வழங்கும் உதவி தொகை, பேரிடர் கால நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு குடும்ப அட்டை அவசியமாக உள்ளது.

சமீபத்தில் நடைமுறைக்கு வந்த மகளிருக்கான உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்ப அட்டை வைத்துள்ள தகுதி வாய்ந்த பெண்களுக்கும் மாதந்தோறும் 1000 ருபாய் உரிமை தொகையாக வழங்கப்பட்டதை தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய ரேஷன் அட்டைகளை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில், புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை சுமார் 2 லட்சத்து 89 ஆயிரத்து 591 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 500 நபர்களுக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களில் 1,28,373 நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், 6640 நபர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

விரைவில் புதிதாக விண்ணப்பித்த தகுதி வாய்ந்த அனைவருக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.