Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

மெஹர் பல்கலை., வேந்தர் இல்ல திருமண விழா- ஆளுநர் R.N.ரவி நேரில் வாழ்த்து!

By MUTHUKRISHNAN
09 Jul 2025, 03:33 PM
மெஹர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அவர்களது இல்ல திருமண விழா சிறப்பாக நடைப்பெற்று முடிந்துள்ளது. ஆளுநர் R.N.ரவி, தமிழ்நாடு மற்றும் மத்திய அமைச்சர் பெருமக்கள் திரளாக பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
மீனாட்சி மற்றும் ஸ்ரீமுத்துக்குமரன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மறைந்த A.N.ராதாகிருஷ்ணன்- கோமதி ராதாகிருஷ்ணன் அவர்களின் பேரனும், ஜெயந்தி ராதாகிருஷ்ணன்- பிரபாகர் எட்வேர்ட், மெஹர் பல்கலைக்கழக (MAHER UNIVERSITY) வேந்தர் அவர்களின் மகன் ஆகாஷ் பிரபாகர் (Pro-Chancellor) சார்பு வேந்தர் அவர்களுக்கும்,

சென்னை, E.V.P குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் E.V.பெருமாள்சாமி ரெட்டி- E.V.P ராஜேஸ்வரி அவர்களின் பேத்தியும், C.M.கிஷோர் ரெட்டி- லீலா கிஷோர் ரெட்டி இவர்களது மகள் அஷ்மிதா ரெட்டிக்கும் கடந்த ஜூன் 30 ஆம் தேதி மாலை 7.00 மணியளவில் திருவேற்காடு (GPN PALACE) ஜி.பி.என் பேலசில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழக ஆளுநர் R.N.ரவி அவர்கள் வருகை தந்து மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்துரை நல்கி சிறப்பித்தார். மேலும், தமிழ்நாடு அமைச்சர் பெருமக்கள், பல்வேறு கல்வி அறக்கட்டளை அறங்காவலர்கள் மற்றும் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் நிறுவனர்கள், பல்கலைக்கழக பேராசிரிய பெருமக்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைத்துறையைச் சார்ந்தவர்கள், தொழிலதிபர்கள், தொழிற்கல்வி, மருத்துவக் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

வாழ்த்துக்கள் நல்கிய நல்லிதயங்களுக்கு மணமக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. திருமண வரவேற்பினைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 2 ஆம் தேதி காலை 7 மணியளவில் ஆர்.கே கன்வென்சன் சென்டரில் (R.K CONVENTION CENTRE CHENNAI) திருமணம் மிக சிறப்பாக நடைபெற்றது.