தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை: இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு!

By Christon
14 May 2026, 12:49 PM
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 விரைவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 விரைவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவ, மாணவிகளுக்கான 'புதுமைப் பெண்' மற்றும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,000 உதவித்தொகை குறித்துச் சட்டமன்றத்தில் விவாதம் எழுந்தது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஜோசப் விஜய், முந்தைய அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தொடரும் என உறுதியளித்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று காலை தகுதியுள்ள மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்குகளில் உதவித்தொகை ரூ.1000 முறையாக வரவு வைக்கப்பட்டது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாற்றம்?

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் இந்தத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதாக அறிவித்திருந்தது. இதனால் இந்த மாதம் எப்போது பணம் வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இது குறித்த முக்கிய அறிக்கையைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அரசின் அதிகாரப்பூர்வ விளக்கம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மே 2026 மாதத்திற்கான உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். மாதம் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.