Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சென்னையில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை- பின்னணி குறித்து போலீஸ் விசாரணை 

By Jayakumar
30 Mar 2025, 08:42 PM
மதுபோதை காரணமாக தகராறு ஏற்பட்டு கொலை நடந்துள்ளதா? அல்லது திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளாரா? வழக்கறிஞராக இருப்பதால் தொழில்முறையில் ஏதேனும் ஏற்பட்ட பிரச்னையில் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் பிரதான சாலையில் பிரஸ்டீஜ் மல்டி ஹோம்ஸ் பவுல்ராஜ் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. காவல்துறைக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வசிக்கும் பொதுமக்கள் குடியிருப்பின் உள்ள வீட்டில் ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் அளித்துள்ளனர்.

வழக்கறிஞர் வெட்டிக்கொலை

 வீடும் இரண்டு நாட்களாக பூட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் சம்பந்தப்பட்ட பூட்டப்பட்ட வீட்டை உடைத்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது உள்ளே அழுகிய நிலையில் இளைஞர் ஒருவர் கிடந்துள்ளார்.முதற்கட்ட விசாரணையில் தலையில் வெட்டு காயங்களுடனும் முகத்தில் வெட்டுப்பட்டு கத்தியுடனும் இருப்பது தெரியவந்தது.

Read more: சினிமா நட்சத்திரம் என்பதால் கூட்டம் கூடும்...விஜய்க்கு துரை வைகோ எம்.பி பதில்

அழுகிய நிலையில் இருக்கும் உடலை மீட்டு விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் உள்ள வெட்டு காயங்களை வைத்து பார்க்கும்பொழுது இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீஸ் விசாரணை

மேலும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை செய்ததில் கொலை செய்யப்பட்டவர் வேளச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடேஷ் என தெரியவந்துள்ளது. இந்த வீட்டு உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். சேதுபதி என்பவரோடு கடந்த நான்கு மாதங்களாக இந்த வீட்டில் வாடகைக்கு இருந்ததாக கூறப்படுகிறது. 

Read more: நீச்சல் கற்றுக்கொடுக்க சென்ற இடத்தில் தந்தை, மகனுக்கு நேர்ந்த சோகம்

வீடு இரண்டு நாட்களாக மூடப்பட்டு இருக்கிற காரணத்தினால், உடன் வசித்த இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுபோதை காரணமாக தகராறு ஏற்பட்டு கொலை நடந்துள்ளதா? அல்லது திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளாரா? வழக்கறிஞராக இருப்பதால் தொழில்முறையில் ஏதேனும் ஏற்பட்ட பிரச்னையில் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த மார்ச் 16ஆம் தேதி இரட்டைக்கொலை நிகழ்ந்த நிலையில், விருகம்பாக்கத்தில் மற்றொரு கொலை சம்பவம் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.